செய்திகள் :

Doctor Vikatan: பித்தப்பை கற்களைக் கரைக்குமா பேக்கிங் சோடா?

post image

Doctor Vikatan: பித்தப்பை கற்களைக் கரைக்கும் வீட்டு சிகிச்சைகள் ஏதேனும் உள்ளனவா என கூகுளில் தேடியபோது, பேக்கிங் சோடாவுக்கு அந்தத் தன்மை இருப்பதாக நிறைய செய்திகளைப் பார்த்தேன். அது எந்த அளவுக்கு உண்மை...? உண்மை எனில் அதை எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும்?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

வயிற்று உப்புசம், தசைப்பிடிப்பு போன்றவற்றுக்கு பேக்கிங் சோடா எடுத்துக்கொள்வதை பலரும் பின்பற்றுவதைக் கேள்விப்படுகிறோம். இத்தகைய வீட்டு சிகிச்சை முறைகள் சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் முடியலாம். 

பேக்கிங் சோடாவின் பிஹெச் அளவில் ஆல்கலைன் தன்மை அதிகமிருக்கும். அதனால் அசிடிட்டி பிரச்னையை இது சற்று குணப்படுத்தக்கூடும். பேக்கிங்  சோடாவில் சோடியம் அளவு மிக மிக அதிகமிருக்கும். எனவே, ரத்த அழுத்தத்துக்கு மருந்துகள் எடுப்போர், வேறு பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுப்போர், சப்ளிமென்ட்டுகள் எடுப்போர் எல்லாம் பேக்கிங் சோடாவை பயன்படுத்தக்கூடாது. கிட்னி தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களும் எடுக்கக்கூடாது. கர்ப்பிணிகள் இந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். 

வீட்டு சிகிச்சைகள், கை வைத்தியங்கள் என்ற பெயரில், கண்டதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற நினைப்பது சரியாதல்ல. அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். உங்கள் உடல்நலனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இன்னும் சிலர், இதுபோன்ற வீட்டு வைத்தியங்களை ஒருமுறை பின்பற்றிப் பழகிவிட்டால், அடிக்கடி செய்துகொண்டே இருப்பார்கள். சோஷியல் மீடியாவில் சொல்கிறார்கள் என்பதை மட்டுமே நம்பி, எதையும் பின்பற்ற வேண்டாம். பித்தப்பை கற்கள் உருவாக என்ன காரணம், அதற்கான முறையான சிகிச்சை என்ன என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசித்துப் பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது. இவை ஏற்படுத்தும் பின்விளைவுகள் வேறு பிரச்னைகளுக்கு காரணமாகலாம் என்பதால் கவனமாக இருங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``விஜய் கொள்கைகளை வரவேற்கிறோம். ஆனால்..." - துரை வைகோ சொல்வதென்ன?

மதுரையில் நடந்த மதிமுக நிர்வாகி குடும்ப விழாவில் கலந்துகொண்ட துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது "மக்காச்சோளத்துக்கு செஸ் வரி போட்டிருந்ததை நீக்க வேண்டும் என்று முதல்வரையும், துணை முதல்வரையும் நிதி... மேலும் பார்க்க

GST: ``வரி குறைவது இருக்கட்டும்; முதலில் அடிப்படையை மாற்றுங்கள்..'' - ஜெய்ராம் ரமேஷ் சாடல்

நேற்று நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் நிர்மலா சீதாராமன், "இனி ஜி.எஸ்.டி வரி குறையும்" என்று கூறியுள்ளார். இதுக்குறித்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில... மேலும் பார்க்க

``பாஜக - நோட்டாவுக்கு போட்டி; தவெக ஒரு பொருட்டே இல்லை..'' - புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி தடாலடி

`நோட்டாவுடன் போட்டி..' - அமைச்சர் ரகுபதிபுதுக்கோட்டையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,"பா.ஜ.க-வினர் முன்னாடி மிஸ்டு கால் கொடுத்து அவர்களது கட்சிக்கு ஆள் சேர்த்தனர். அத... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இந்து கோயில் மீது தாக்குதல்; வெடித்த சர்ச்சை... `அருவருப்பான செயல்' -இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள BAPS (போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா) கோயில் சில மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. இது அங்குள்ள இந்துக்களிடையே பரபரப்பை ஏற்படுத்... மேலும் பார்க்க

Syria: 2 நாள் தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை... சிரியாவில் நடந்த கோர சம்பவம்..

சிரியாவில் உள்நாட்டு கலவரம்மத்திய கிழக்கு நாடான சிரியாவில் இரண்டு நாள்களாக நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தில் பெண்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.சிரியாவில் உள்ள `மனித உரிமைகள் கண்கா... மேலும் பார்க்க

Jagdeep Dhankhar: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நெஞ்சுவலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும் உள்ளார் ஜக்தீப் தன்கர் (வயது 73). இன்று அதிகாலை 2 மணியளவில் ஜகதீப் தன்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை அவரது குடும்பத்தினர் டெல்... மேலும் பார்க்க