செய்திகள் :

Doctor Vikatan: மூட்டுவலியிலிருந்து நிவாரணம் தருமா knee caps?

post image

Doctor Vikatan: என் உறவினருக்கு 70 வயதாகிறது. மூட்டுவலிக்காக அவர் முழங்கால்களில் அணியக்கூடிய பேண்டு (knee caps) உபயோகிக்கிறார். எனக்கும் சமீப காலமாக மூட்டுகளில் வலியை உணர்கிறேன். நானும் அந்த முழங்கால் பேண்டுகளை வாங்கி அணிந்துகொள்ளலாமா... மாத்திரை பயன்பாட்டுக்கு பதில் இது பலன் அளிக்குமா?

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

மூட்டுவலி என்றில்லை, வேறு எந்த வலியானாலும், முதலில் அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. அதைத் தவிர்த்து, பொதுவான ஒரு தீர்வைப் பின்பற்றுவது என்பது சரியான விஷயமே அல்ல.

மூட்டுவலிக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். ஒருவேளை, தேய்மானம்தான் காரணம் என்றாலுமே, அதற்கான தீர்வு என்பது நபருக்கு நபர் வேறுபடும். நம் முழங்கால் மூட்டுகளின் முக்கியமான வேலை என்பது நம் உடல் எடையைத் தாங்குவது. நடக்கும்போது நம் உடலின் எடையை 70 சதவிகிதம் வரையிலும், ஓடும்போது 90 முதல் 100 சதவிகிதம் வரையிலும் மூட்டுகள் வழியே தரைக்கு இறங்கும். இத்தனை எடையைத் தாங்குவதால், மூட்டுகள்தான் நமக்கு முதலில் தேய்மானமாகின்றன.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பேண்டுகள், எடையை சற்று பகிர்ந்து அளிக்க உதவியாக இருக்கும். அதாவது மூட்டுகளில் எந்த இடத்தில் தேய்மானம் இருக்குமோ, அந்த இடத்திலிருந்து எடையை சற்று பகிர்ந்து மற்ற இடங்களுக்குச் செலுத்தும் வேலையைச் செய்யும். அதாவது எடையானது பரவலாக விழும்படி வழி செய்து கொடுக்கும்.

knee caps

தேய்ந்துபோன மூட்டுகள் ஒன்றோடு ஒன்று உராயும்போது ஏற்படும் அழுத்தமானது இதன்  மூலம் 30 முதல் 40 சதவிகிதம் வரை குறையும். ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு ஸ்டேஜ் 2 அல்லது 3 என்ற நிலையில்  உள்ளவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும். ஸ்டேஜ் 1- நிலையில் உள்ளவர்களுக்கும் தேவைக்கேற்ப மருத்துவர்கள் இந்த பேண்டை பரிந்துரைப்போம்.

இந்தச் சிகிச்சையானது மருத்துவர் பரிந்துரையின் பேரில் பின்பற்ற வேண்டிய ப்ரிஸ்கிரிப்ஷன் ட்ரீட்மென்ட் என்றே சொல்ல வேண்டும். பேண்டு என  பொதுவாகச் சொன்னாலும், அதிலும் 25-க்கும் அதிகமான வகைகள் உள்ளன. யாருக்கு, எந்த பேண்டு, எந்தப் பக்கம் எடை விழ வேண்டும், எந்தப் பக்கம் விழக்கூடாது என்பதையெல்லாம் பார்த்துதான் இது பரிந்துரைக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். எனவே, முதலில் உங்கள் மூட்டுவலிக்கான காரணம் அறிந்து சிகிச்சை எடுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Ambedkar: ``எந்த இந்தியரும் சகித்துக் கொள்ளமாட்டார்.." - அமித் ஷாவுக்கு கமல்ஹாசன் பதில்!

அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகி விட்டது என மத்தியில் ஆளும் பாஜக அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்த நிலையில், நாடுமுழுவதும் இந்த விவகாரம் பேசுப் பொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக எத... மேலும் பார்க்க

``அமித் ஷாவின் கருத்தை பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்கிறார்களா?'' - அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்ப... மேலும் பார்க்க

``குடித்துவிட்டு உயிரிழந்தால் அமைச்சரை கைது செய்வார்களா?'' -அல்லு அர்ஜுன் கைதுக்கு சீமான் கேள்வி!

திரைப்பட இயக்குநர் பாலா, திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் கொண்டாடுவதையும், அவரது அடுத்த படைப்பான 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் இணைத்து பெரும் விழாவாக நேற்று சென்னையில் கொண்ட... மேலும் பார்க்க

Ambedkar: ``டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த பாவங்கள்..!" - பட்டியலிடும் பிரதமர் மோடி

அமித் ஷாபேச்சுநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் பெயரை முன்வைத்து காங்கிரஸைச் சாடியிருப்பது தற்போது பெரும் விவாதமாக வெடித்திருக்கிறது.நேற்று நடைபெற்ற கூட்... மேலும் பார்க்க

``விஜய் மல்லையா சொத்தை விற்றதில் வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி திரும்பியது'' - நிர்மலா சீதாராமன்

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வருகிறது.... மேலும் பார்க்க

``தன்னை இளைஞர் என்று சொல்லும் 54 வயதான தலைவர்.." - நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்சு!

நடந்துவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் விவாதம் நடந்தது. அப்போது ராஜ்யசபாவில் பேசிய அமித் ஷா, ``அரசியலமைப்பு ஒருபோதும் மாறாதது என்றெல்லாம் கருதப்படவில்லை. அரசியலமை... மேலும் பார்க்க