செய்திகள் :

Doctor Vikatan: வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா?

post image

Doctor Vikatan: ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா, எந்த மாதிரி பயிற்சிகள் செய்வோர் புரோட்டீன் பவுடர் சாப்பிட வேண்டும்?யாரெல்லாம் தவிர்க்க வேண்டும், வே புரோட்டீன் என்பது எல்லோருக்கும் ஏற்றதா, இது தவிர்த்து வேறு என்ன புரோட்டீன் சாப்பிடலாம்?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

புரோட்டீன் பவுடர் அல்லது சப்ளிமென்ட் என்பது எல்லோருக்கும் தேவைப்படுவதில்லை. ஒருவருடைய தினசரி உணவுத்தேவையே அதைப் பூர்த்தி செய்துவிடும் பட்சத்தில் தனியே புரோட்டீன் பவுடரோ, சப்ளிமென்ட்டோ அவசியமில்லை.

அதாவது ஒருவரது தினசரி உணவில் சிக்கன், முட்டை, மீன், பருப்பு வகைகள், டோஃபு போன்றவை  போதுமான அளவு இடம்பெற்றால், புரதக் குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை.

உணவுகள் தாண்டி, புரோட்டீன் சப்ளிமென்ட்டும் எடுக்க வேண்டாம். சிலருக்கு  சரியான நேரத்துக்கு, சரியாகச் சாப்பிட முடியாமல் போகலாம்.

சாப்பிடாமலேயே இருப்பதற்கு பதில், புரோட்டீன் பவுடர் குடிப்பது அவர்களுக்கு சௌகர்யமாக இருக்கும்.  அதேபோல சைவ உணவுக்காரர்கள், வீகன் உணவுப்பழக்கமுள்ளோருக்கெல்லாம் உணவின் மூலம் போதுமான புரோட்டீன் கிடைக்காதபோதும், புரோட்டீன் பவுடர் உதவும். பாடி பில்டர்களுக்கும் இது அவசியமாகலாம். 

வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா?

ரெகுலராக ஜிம் செல்பவர்களுக்கு, மஸுல் பில்டிங் செய்வோருக்கு, கொழுப்பைக் குறைத்து, தசை அடர்த்தியைத் தக்கவைக்க நினைப்போருக்கெல்லாம் வே புரோட்டீன் தேவைப்படலாம்.

ஏதேனும் உடல்நலக் கோளாறிலிருந்து மீண்டவர்களுக்கும், அடிபட்டு குணமானவர்களுக்கும் இந்தப் புரதம் நிச்சயம் உதவியாக இருக்கும்.

சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு புரதத் தேவை குறைவாகவே இருக்கும் என்பதால் அவர்கள் இவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

வே புரோட்டீன் என்பது பாலில் இருந்து பெறப்படுவது. எனவே, லாக்டோஸ் இன்டாலரென்ஸ் எனப்படும் பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு வே புரோட்டீனை பரிந்துரைக்க மாட்டோம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே, எந்தவிதமான புரோட்டீன் சப்ளிமென்ட்டையும் எடுத்துக்கொள்வது சிறந்தது.

புரோட்டீன்

பச்சைப் பட்டாணியிலிருந்து பெறப்படும்  Pea protein        இவர்களுக்கான சிறந்த மாற்றாக இருக்கும். அதே போல ஹெம்ப் புரோட்டீன், சோயா புரோட்டீன் என  நிறைய ஆப்ஷன்கள் உள்ளன. 

அசைவ உணவுக்காரர்களுக்கு பெரும்பாலும் உணவின் மூலமே போதுமான புரோட்டீன் கிடைத்துவிடும். சைவ உணவுக்காரர்களுக்கு புரத உணவுகளே இல்லை என அர்த்தமல்ல. பருப்பு வகைகள், பனீர், டோஃபு என புரதம் அதிகமுள்ள உணவுகளைத் தேர்வுசெய்து சாப்பிட வேண்டும்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

மன அழுத்தம் வந்தால் பற்களைக் கடிக்கிறீர்களா? இதை படிங்க!

மன அழுத்தத்தால் உடல் நலமும் பாதிப்படையும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பற்களும் பாதிப்படையும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஹேமா மாலதி. ''கோபத்தில் இருக்கும்போது நம்மை அறியாமல் நம... மேலும் பார்க்க

சீர்காழி: அரசு மருத்துவமனையில் ஊசி போட்டதும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நல பாதிப்பு - நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசின் தாய் சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 27 கர்ப்பிணிகள் மற்றும் 20 பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந... மேலும் பார்க்க

கேரளா: மூளையை தின்னும் அமீபா: 19 மரணம், 71 பேருக்கு சிகிச்சை- சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வது என்ன?

மூளையை தின்னும் அமீபா நோய் என அறியப்படும் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் தொற்று கேரளாவில் பரவிவருகிறது. கோழிக்கோட்டில் பிறந்து 3 மாதமே ஆன குழந்தை மூளையை தின்னும் அமீபா தாக்கி மரணமடைந்த சம்பவம்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?

Doctor Vikatan:நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது ஏன். அவர்களது தோற்றமே நீரிழிவு வந்ததைக் காட்டிக் கொடுக்கிறதே, அது ஏன். நீரிழிவு வந்தால் ஆரோக்கியமான தோற்றம் சாத்தியமில்லையா?பதில் சொல்கிறார், சென... மேலும் பார்க்க

Men' Health: `ஆண் பாலியல் ஹார்மோன்' சுரப்பை அதிகப்படுத்தும் உணவுகள்

''மலட்டுத்தன்மைக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இன்றைய தலைமுறையினரிடம் அதிகரிக்கும் தவறான உணவுப்பழக்கம்தான் முக்கியக் காரணம். அது, ஆண்களின் பாலியல் ஹார்மோனான `டெஸ்டோஸ்டீரான்’ சுரப்பை பாதித்து, தந... மேலும் பார்க்க

IKIGAI : ஜப்பானியர்கள் போல நாமும் 100 ஆண்டு வாழலாமா?

நூறு வயது வரை வாழ வேண்டும் என்கிற ஆசை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இந்த ஆசை, ஜப்பானில் இருக்கிற ஒகினாவா (Okinawa) தீவு மக்களை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாக நிஜமாகிக்கொண்டே இருக்கிறது. உலக... மேலும் பார்க்க