முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
Dragon: எக்ஸ்க்ளூசிவ் தகவல் சொன்ன அஷ்வத் மாரிமுத்து; மகிழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன்!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் இன்று (பிப்ரவரி 21) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
`லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை `ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். அனுபமா , கயது லோகர் , மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் 'டிராகன்’ பட வெளியீட்டிற்கு பின் இயக்குநர் அஷ்வத் மற்றும் நடிகர் பிரதீப் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்கள். முதலில் பேசிய பிரதீப், " எனக்கு இந்த அற்புதமான படத்தைக் கொடுத்த அஷ்வத்திற்கு நான் மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தைப் பார்க்கும்போது எனக்கு அழுகை வரும். அதுதான் அஷ்வத் ஒரு அற்புதமான இயக்குநர் என்பதற்கு சான்று. 10 வருஷமாக கூடவே இருந்து பார்க்கிறேன்.
அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பது தெரியும். ஆனால் இந்தப் பார்த்த பிறகுதான் தெரியும் அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்று. அந்த அளவிற்கு இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். இது ஒரு நல்ல படம். நல்ல கருத்துக்களைச் சொல்லக்கூடிய படம். இந்தப் படத்தைக் கொடுத்த என்னுடைய நண்பருக்கு நன்றி. உங்களில் ஒருவனாக என்னை இங்கு நிற்க வைத்ததற்கு நன்றி " என்று நெகிழ்ச்சியாக கண்கலங்கியப்படி பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அஷ்வத் மாரிமுத்து, " உங்கள் எல்லோருக்கும் ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்றை சொல்கிறேன். அடுத்து ஏ.ஜி.எஸ் தயாரிப்பில், பிரதீப், அஷ்வத் காம்போ மீண்டும் வரும். அந்தப் படம் நண்பர் என்பதற்காக அல்ல. பிரதீப் என்ற நட்சத்திரத்திற்காக எடுக்கப்படும். அடுத்த ஒரு மூன்று வருஷத்திற்குள் வெளியாகும். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெறுவதற்கு தயாரிப்பு நிறுவனமும் ஒரு காரணம்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...