ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்துபவரா?
DY Chandrachud `நீதித்துறையில் குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துகின்றனரா?'- சந்திரசூட் பதில்
"இந்தியாவின் உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் மக்களின் தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளன. இதனால் மக்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளன." என்கிறார் சந்திரசூட்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற டி.ஒய்.சந்திரசூட், சமீபத்தில் பிபிசி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவரிடம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் இருக்கும் பாலியல் விகிதம் குறித்தும்... குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்த இந்து ஆண்களே தொடர்ந்து தலைமைப் பொறுப்புக்கு வருவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சந்திரசூட், "இந்த அதிகார பிரமிடின் அடித்தளமாக விளங்கும் மாவட்ட நீதித்துறைக்கான புதிய ஆட்சேர்ப்பில் 50% வரை பெண்கள் இருக்கின்றனர். சில மாநிலங்களில் 60 முதல் 70% வரை பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதற்கு காரணம் தற்போது சட்டப்படிப்பு பெண்களைச் சென்றடைந்துள்ளது. சட்டக் கல்லூரிகளில் காணும் பாலின சமநிலை, நீதித்துறையின் அடித்தளத்தில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. மாவட்ட நீதித்துறை பொறுப்புகளை அடைந்துள்ள பெண்கள், மேலும் முன்னேறுவார்கள்." என பதிலளித்தார்.
மேலும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதின் மகனாக இருப்பது குறித்த கேள்விக்கு, தனது தந்தை தலைமை நீதிபதியாக இருந்தவரை தன்னை அவர் நீதிமன்றம் செல்லக் கூடாது எனத் தடுத்ததாகக் கூறியுள்ளார். "அதனால்தான் நான் 3 ஆண்டுகள் ஹார்வர்ட் சட்டக் கல்லூரிக்கு சென்று படித்தேன். அப்பா ஓய்வுபெற்ற பிறகே நீதிமன்றத்துக்கு சென்றேன்.
நீங்கள் நீதித்துறையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முதல் தலைமுறையாக சட்டத்துறைக்கு வருபவர்களே அதிகம் வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் இருக்கின்றனர்.
நீங்கள் சொல்வதற்கு மாற்றாக, நீதித்துறையில் குறிப்பிட்ட சாதியினரோ, நீதித்துறையில் உயர்மட்ட பதவியில் இருந்தவர்களோ அதிகாரம் செலுத்தவில்லை. பெண்கள் மிகுந்த பொறுப்புள்ள பதவிகளை அடைந்துகொண்டிருக்கிறார்கள்" என்றார்.