ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஒரே செல்ஃபோன் எண்ணைப் பயன்படுத்துபவரா?
`மனைவி கணவரை தவிர்த்து வேறொருவர் மீது காதலும், நெருக்கமும் கொண்டிருப்பது தகாத உறவாகாது'- MP ஹைகோர்ட்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்று கூறி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்து இடைக்கால நிவாரணமாக மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட்டு இருந்தது. அதோடு வெறுமனே உணர்ச்சிப்பூர்வமான தொடர்பு, உறவு தகாத தொடர்பாகாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்திருந்தது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இம்மனு மீதான விசாரணையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி அலுவாலியா, ''தகாத உறவு என்பதன் அர்த்தம் திருமணம் தாண்டி வேறு ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதாகும். அதேசமயம் ஒரு மனைவி கணவனை தவிர்த்து வேறு ஒருவருடன் தாம்பத்திய உறவு இல்லாமல், காதல் மற்றும் நெருக்கம் காட்டுவது தகாத தொடர்பாகாது. அப்படிப்பட்ட மனைவி தகாத உறவில் இருக்கிறார் என்று சொல்ல முடியாது. 144(5) மற்றும் 125(4) வது சட்டப்பிரிவுகள் ஒரு மனைவி திருமணம் மீறிய உறவில் இருக்கிறார் என்பதை நிரூபித்தால் மட்டுமே அவருக்கு ஜீவனாம்சம் கொடுப்பதைச் சட்டம் தடுக்கிறது. உடல் ரீதியிலான தொடர்பு இல்லாத நிலையில் அதனை தகர்த்த தொடர்பாகக் கூற முடியாது என்று குடும்ப நீதிமன்றம் குறிப்பிட்டு இருப்பதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/hd8om5rn/images-50.jpg)
மனுதாரர் தனது மனுவில், தான் மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை செய்வதாகவும், 8 ஆயிரம் மட்டும் சம்பளம் கிடைப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு தனது மனைவி இந்து திருமண சட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ரூபாய் பெறுவதாகவும், பியூட்டி பார்லர் நடத்தி அதிலும் சம்பாதிப்பதாகவும், குடும்ப நீதிமன்றம் தெரிவித்தபடி தான் 4 ஆயிரம் கொடுத்தால் தனது சம்பளத்தை விட... மனைவியின் வருமானம் அதிகமாகிவிடும் என்று குறிப்பிட்டுருகிறார். ஆனால் அவரது வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதோடு மனுதாரர் கொடுத்திருக்கும் சம்பள சிலிப் எப்போது எங்கிருந்து கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல் இல்லாமல் இருக்கிறது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி குறிப்பிட்டார்.