மிகவும் சிறப்பான தருணம்... உலகக் கோப்பையை வென்றது குறித்து மனம் திறந்த இந்திய கே...
ECR: "அவர்தான் காரிலும் திமுக கொடியைக் கட்டியுள்ளார்..." - காவல் துணை ஆணையர் விளக்கம்
சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் வந்த பெண்களை, மற்றொரு காரில் துரத்தி, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அவர்களைச் செல்ல விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபடும் காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பெண்களைத் துரத்திய அந்த இளைஞர்களின் காரில் தி.மு.க கொடி பறந்தது அரசியல் சர்ச்சையாகியிருந்தது. இதுகுறித்து, "சென்னை ஈ.சி.ஆர் சாலையில் இளைஞர்களின் காரை பெண்களின் கார் இடித்துவிட்டு நிறுத்தாமல் சென்றதால், அந்த இளைஞர்கள் அந்தப் பெண்களின் காரை துரத்திச் சென்றுள்ளனர். பிரச்னையில் ஈடுபட்ட இளைஞர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களைக் கைது செய்வோம்" என்று சென்னை கிழக்குக் கடற்கரை கானாத்தூர் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண், "நாங்கள் யாருடைய வாகனத்தையும் இடிக்கவில்லை, வேண்டுமென்றால் சிசிடிவி-யை சோதனை செய்து பாருங்கள்" என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் 4 பேர்கள் இதுவரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய குற்றவாளியான சந்துரு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து நேற்று (பிப் 1) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் பள்ளிக்கரனை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், "இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேரைக் கைது செய்துள்ளனர். இப்போது சந்துரு என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். சந்துரு என்பவர் மீது ஏற்கனவே கடத்தல், சீட்டிங் என இரண்டு வழக்குகள் இருக்கின்றன. சம்பவத்தின்போது காரில் கட்சிக் கொடி இருந்தது தொடர்பாக விசாரணை நடத்தினோம். சிசிடிவி கேமராக்களை செக்கிங் செய்திருக்கிறோம்.
சந்துருவின் நண்பர் சந்தோஷ் என்பவர் கட்சிக் கொடியைக் காரில் கட்டும் பழக்கமுடையவர். அவர்தான் சந்துருவின் காரிலும் கட்சிக் கொடியைக் கட்டிவிட்டுள்ளதாகக் கூறினார்கள். நெடுஞ்சாலையில் இருக்கும் டோல்களைத் தவிர்ப்பதற்காக, சும்மா பந்தாவிற்காகக் கட்சியைக் கொடியைப் பயன்படுத்தியுள்ளனர். சந்துருவின் உறவினர் ஒருவர் தி.மு.க-வில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஆனால், இந்த வழக்கிற்கு சந்துருவின் பின்புலத்தைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அவசியம் ஏற்பட்டால் விசாரணை நடத்துவோம். இதில் இரு தரப்பினரும் வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறார்கள். உண்மை புலன் விசாரணையை முடித்துவிட்டு அறிவிப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs