செய்திகள் :

Egypt: அருங்காட்சியகத்தில் இருந்த 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காப்பு மாயம் - பின்னணி என்ன?

post image

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் இருந்து, சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காப்பு ஒன்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரோ மன்னர் என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருளைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அருங்காட்சியகத்தின் ஆய்வகத்தில் இந்த தங்கக் காப்பு கடைசியாகக் காணப்பட்டிருக்கிறது.

இந்த விலைமதிப்பற்ற ஆபரணம், சீரமைப்புப் பணிகளின்போது காணாமல் போனதாக எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தங்கக் காப்பு நாடுவிட்டு நாடு செல்லாமல் இருக்க அல்லது கடத்தப்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதன் புகைப்படங்கள் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில புகைப்படங்கள் காணாமல் போன காப்புடையது அல்ல என்றும், அது அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ள மற்றொரு காப்பின் படம் என்றும் அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குநர் தெளிவுபடுத்தியுள்ளார்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

பால் தாக்கரே மனைவி சிலை மீது சிவப்பு பெயிண்ட்டை ஊற்றிய மர்ம நபர்; மும்பை தாதர் பகுதியில் பதற்றம்

மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதான வளாகத்திற்கு வெளியில் ஒரு நுழைவு வாயிலில் மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் மனைவி மீனாதாய் தாக்கரேயின் மார்பளவு சிலை இருக்கிறது. சிவாஜி பார்க் எப்போதும் பிஸியாகவ... மேலும் பார்க்க

50,000 தேனீக்களுடன் நட்பு; உடலை மூடிய தேனீக்கள், ஆனாலும் கொட்டவில்லை - உ.பியில் நடந்த விநோத சம்பவம்

தேனீக்கள் என்றாலே, நம்மில் பலருக்கும் ஒருவித அச்சம் ஏற்படும். அதன் கொடுக்குகள் ஏற்படுத்தும் வலியும், வீக்கமும் இதற்குக் காரணம். தேனீயைப் பார்த்தாலே தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான தேனீ... மேலும் பார்க்க

Mumbai Monorail: ``சேவையை மேம்படுத்த தற்காலிகமாக மோனோ ரயிலை நிறுத்துகிறோம்'' - மஹாராஷ்டிரா அரசு

இந்தியாவில் மும்பையில் மட்டுமே மோனோ ரயில் சேவை அமலில் உள்ளது. மும்பை செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை இந்த மோனோ ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், இதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை. இதனால் மாந... மேலும் பார்க்க

அமிதாப் பச்சன் : ரத்ததானம் பெற்றதில் வைரஸ் தொற்று, 25% கல்லீரலுடன் வாழ்கிறேன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் இன்னும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். திரைப்படங்கள், கோன்பனேகா குரோர்பதி டிவி நிகழ்ச்சி, விளம்பரங்கள், சோசியல் மீடியா என்று தன்னை எப்போதும் உற்சாகமாக... மேலும் பார்க்க

Uttar Pradesh: `இரு முறை கடித்தால் முகாம்களில் அடைப்பு' - தெருநாய் பிரச்னைக்கு புதிய நெறிமுறைகள்

தெருநாய்கள் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பின. டெல்லியில் தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பின்னர் தனது உத்தரவை திருத... மேலும் பார்க்க

Pakistan: 15 வயதில் மாரடைப்பு; பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்திய குழந்தை பிரபலத்தின் மரணம்!

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான உமர் ஷா என்ற சிறுவன், 15 வயதில் திடீர் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக உயிரிழந்த செய்தி, அந்நாட்டு பொழுதுபோக்கு உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக... மேலும் பார்க்க