கடம்பூரில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு
Elephant: தீவிர சிகிச்சையில் பாகன்; தேடி வந்த யானையின் பாசப் போராட்டம்; வைரலாகும் வீடியோ..!
காட்டுக்கு ராஜாவான சிங்கம் முதல் பிரம்மாண்டமாக வியந்து பார்க்கும் யானை வரை அன்புக்கு அடங்கி, மடங்கி மனிதர்களின் கைகளுக்குள் சுருங்குவதை பல சந்தர்ப்பங்களில் பார்த்திருப்போம். ஆனால், அந்த அன்பின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்பதற்கு உதராணமாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வயது முதிர்ந்த பாகான் ஒருவர். நீண்ட நாள்களாக படுக்கையில் இருக்கிறார். திடீரென அவருக்கு உடல் நிலை மோசமாகிவிடுகிறது. அதனால் அவர் மருத்துவர்களின் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்படுகிறார். தீவிர சிகிச்சையில் இருக்கும் அந்தப் பாகனை பார்த்து கண்ணீர் விடுகிறது அந்த யானை. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Elephant bids farewell to terminally ill caretaker in emotional video pic.twitter.com/jLympoPz1m
— Mohammad V (@Mohamma68749612) February 10, 2025
அந்த வீடியோவில், பாகான் இருக்கும் அறைவாசல் வரை நடந்து வந்த யானை, வாசல் அருகே வந்ததும், குனிந்து, தவழ்ந்து வருகிறது. யானைப் பாகனை தொட்டுப் பார்க்கிறது. அங்கிருக்கும் ஒருப் பெண் பாகனின் கைகளை யானையின் துதிக்கையின் மீது வைக்கிறார். அந்தக் காட்சி காண்பவரை கலங்க வைக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியான இந்த வீடியோ, தற்போது உலகளவில் வைரலாகியிருக்கிறது. இந்த வீடியோ குறித்து வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றாலும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உருவாகக்கூடிய ஆழமான பிணைப்புகளை உலகிற்கு நினைவூட்டும் வகையில், இந்த காணொளி தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.