செய்திகள் :

Erode East: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு - முழு விவரம் இங்கே

post image
தமிழகத்தில் காலியாக இருக்கும் ஈரோ கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
ராஜிவ் குமார்

7 வது டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியிலுள்ள தேர்தல் ஆணையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் யானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 -ம் தேதி நடக்குமென அறிவித்தனர். தொடர்ந்து பேசியவர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்குமென அறிவித்திருக்கின்றனர். மேலும், வேட்புமனு தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடக்கும் என்றும் அறிவித்திருக்கின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வென்றிருந்தார். திடீரென அவர் உயிரிழந்த நிலையில் நடந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். அவரும் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்துதான் தேர்தல் ஆணையம் இப்போது ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது. இதன்மூலம், ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்திருக்கிறது.

EVKS ELANGOVAN

திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்குத் தொகுதி எந்தக் கட்சிக்கு செல்லும்? அதிமுக இந்த இடைத்தேர்தலையும் புறக்கணிக்குமா? பாஜக என்ன செய்யப்போகிறது? 2026 தான் இலக்கு என கூறும் விஜய் என்ன செய்யப்போகிறார்? என பலத்த எதிர்பார்ப்புகள் உருவாகியிருக்கிறது.

Afghanistan: தாலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு - பேசியது என்ன?

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மவ்லானி அமிர் கான் முத்தாகியை சந்தித்துள்ளார். துபாயில் நடந்த இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய வளர்ச... மேலும் பார்க்க

மதுரை: முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கலெக்டர் அலுவலகம் வந்த பாஜக நிர்வாகி; காரணம் என்ன?

முதல்வர் படத்துடன் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பா.ஜ.க நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக நிர்வாகிகள்மனு அளிக்க வந்த மதுரை மாவட்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் சரவணன் செய்தியாளர்களிடம்... மேலும் பார்க்க

'மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை...' - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்; டெல்லிக்குப் பறந்த புகார்

மீண்டும் தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் என்ற வாசகத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலைமூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தும் பா.... மேலும் பார்க்க

"காவல் துறையின் அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது.." - சு.வெங்கடேசன் கோபத்தின் காரணம் என்ன?

"டங்ஸ்டன் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளரை குறிவைத்து காவல்துறை இழுத்துச் சென்றது ஏன்? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மதுரை நாடாளும... மேலும் பார்க்க

”திமுக அரசை அதன் கூட்டணிக் கட்சிகள் மயிலிறகால் மென்மையாக எதிர்க்கின்றன” - செம்மலை காட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, தி.மு.கமேயர்சண்.இராமநாதன் செய்கின்ற முறைகேடுகள் உள்ளிட்டவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தபால் நிலையம் எதிரே கண்ட ஆர்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க