செய்திகள் :

F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?

post image
உலகப் புகழ் பெற்ற கார் பந்தயமாக F1 ரேசில் முதல் பெண் ரேஸ் இஞ்ஜினீயராக தேர்வாகியிருக்கிறார் லாரா முல்லர்.

ஜெர்மனியைச் சேர்ந்த லாரா, ஹாஸ் நிறுவனத்தின் சார்பாக அவர்களது குழுவில் முதன்முறை ஓட்டுநராக அறிமுகமாகும் எஸ்டெபன் ஓகான் என்பவருக்கு இன்ஜினீயராகச் செயல்படவுள்ளார்.

2025ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் போட்டிகள் இந்த இணைக்கு தொடக்கமாக அமையும். ட்ராக்கில் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பயணிக்கும்போது ஓட்டுநர் தொடர்புகொள்ளும் நபராக லாரா செயல்படுவார்.

2022ம் ஆண்டு ஹாஸில் சேர்ந்த லாரா வாகனத்தின் செயல்திறனை கண்காணிக்கும் position performance engineer-ஆகப் பணியாற்றினார். அவரது குழுவினர் லாரா வேலையில் உறுதியான நெறிமுறைகளைப் பின் தொடர்வதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது லாரா இஞ்ஜினீயராகி அணியை வழிநடத்தும் இடத்துக்கு வந்துள்ளார்.

F1 பந்தயங்களைப் பொறுத்தவரை ரேஸ் இன்ஜினீயர் என்பது ட்ராக்கில் இருக்கக் கூடிய மிக உயர்ந்த பதவி. ஓட்டுநருக்கும் அணியினருக்கும் உத்தரவுகளை வழங்குவதன் மூலம் மொத்த செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருப்பார்.

லாரா, எஸ்டெபன் ஓகான்

லாரா மிகவும் தீர்மானமான சுபாவம் கொண்டவர் மற்றும் கடினமாக உழைக்கக் கூடியவர் எனக் கூறும் ஹாஸ் குழுவினர், ஓட்டுநர் எஸ்டெபன் ஓகான்னுக்கு பொருத்தமான இஞ்ஜினீயராகச் செயல்படுவார் என்கின்றனர்.

ஹாஸ் குழுவின் உறுப்பினர் ஒருவர், "லாராவின் வேலை நெறிமுறைகள் சிறந்தவை. உதாரணமாக ஒரு பிரச்னையை அவர் கண்டார் என்றால் அதன் ஆழம் வரை சென்று சரிசெய்வார். சிலர் முதல் பதில் கிடைத்ததுமே திருப்தி அடைந்துவிடுவர். ஆனால் லாராவுக்கு ஒரு பிரச்னையின் கீழ் 10 பிரச்னைகள் ஒழிந்திருப்பது தெரியும். அவர் அனைத்தையும் சரிசெய்யும் வரை முடிக்க மாட்டார்." என்றார்.

லாரா

மேலும், "எங்கள் அணிக்கு நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதோ, எந்த பாலினம் என்பதோ முக்கியம் இல்லை. வேலைதான் முக்கியம். நீங்கள் எப்படி அணியுடன் ஒருங்கிணைகிறீர்கள் என்பதுதான் முக்கியம்" என்றார் அவர்.

Samantha: "சென்னைதான் எனக்கு எல்லாத்தையும் கற்றுக் கொடுத்துச்சு..." - சமந்தா நெகிழ்ச்சி

'World Pickle Ball' எனும் லீகில் ஒரு பிக்கிள் பால் டீமை நடிகை சமந்தா வாங்கியிருக்கிறார். சென்னையை மையமாகக் கொண்டு, 'சென்னை சூப்பர் சாம்ப்ஸ்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அணிக்கு சத்யபாமா பல்கலைக்க... மேலும் பார்க்க

``எங்கும் மாசு; உழைப்பு வீணாகிவிட்டது'' -இந்தியா ஓபன் பேட்மிண்டனில் ஆடிய டென்மார்க் வீராங்கனை வேதனை

டெல்லியில் நடைபெற்ற இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்ற டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் (Mia Blichfeldt), "போட்டிகள் நடத்தப்பட்ட இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானம் மோசமான நிலையில் இருந... மேலும் பார்க்க

Champions Trophy: '750+ ஆவரேஜ் இருந்தாலும் டீம்ல இடம் கிடையாது' - சாம்பியன்ஸ் டிராபி அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வரும் கருண் நாயருக்கு இந்த அணியிலும் இடம் இல்லை.Rohit S... மேலும் பார்க்க

BCCI: 'கோச் அனுமதி இல்லாம இதெல்லாம் Not Allowed..!'- இந்திய வீரர்களுக்கு 10 கட்டுப்பாடுகள்?

பார்டர் கவாஸ்கர் தொடரில் ஏற்பட்ட தோல்வியால் பிசிசிஐ இந்திய அணியின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித்... மேலும் பார்க்க