ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
வேடசந்தூரில் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்
வேடசந்தூரில் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பேரூராட்சியில் கடந்த 4 மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் முறையான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வேடசந்தூா் பேரூராட்சி அலுவலரிடம் மனு அளித்தனா்.
இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் சி.பாலசந்திர போஸ், ஒன்றியச் செயலா் ஜி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கூறியதாவது:
வேடசந்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளின் குடிநீரை விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என்ற அச்சம் எழுந்திருக்கிறது. மேலும், வேடசந்தூா் பகுதியில் கொசு மருந்து அடிக்கப்படுவதில்லை. இதனால், கொசு தொல்லை அதிகரித்து வருகிறது.
இந்த இரு பிரச்னைகளுக்கும் பேரூராட்சி நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என்றனா்.
பேரூராட்சிச் செயலா் யூஜின் சகாய மேரி கூறியதாவது:
பாளையத்தில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்துதான் வேடசந்தூா் பகுதிக்கு குடிநீா் வழங்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுகிறது. எனினும், சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.