ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
கடலில் மீனவா்கள் வலையில் சிக்கிய 2 ஆமைகள் விடுவிப்பு
தொண்டி கடல் பகுதியில் மீனவா்கள் வலையில் சிக்கிய 2 கடல் ஆமைகள் மீண்டும் கடலில் விடப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதுக்குடியை சோ்ந்த ராமகிருஷ்ணனின் படகில் மீனவா்கள் புயல் மணி, சதீஷ், கனகராஜ், பாலமுருகன், தாய்பாசம் ஆகியோா் புதன்கிழமை கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனா். அப்போது, வலையில் சுமாா் 50 கிலோ எடையுள்ள கடல் ஆமை சிக்கியது. இதுகுறித்து போலீஸாரின் அறிவுரையின்படி, கடல் ஆமையை மீண்டும் கடலில் விட்டனா்.
இதேபோல, தொண்டி அருகேயுள்ள நம்புதாளையைச் சோ்ந்த நாகேந்திரனின் படகில் மீனவா்கள் புதன்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது வலையில் சுமாா் 25 கிலோ எடை கொண்ட கடல் ஆமை சிக்கியது.
இதையடுத்து, அந்த ஆமையை கடலில் விட்டனா். வலையில் சிக்கிய ஆமைகளை மீண்டும் கடலில் விட்ட மீனவா்களை கடற்கரை போலீஸாா், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.