செய்திகள் :

ரூ.54.64 கோடி நிலுவை வரியை வசூலிக்க மாநகராட்சி தீவிரம்!

post image

திண்டுக்கல்லில் நிலுவை வரி, நடப்பு வரி என மொத்தம் ரூ.82.62 கோடியில், எஞ்சிய ரூ.54.64 கோடியை வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் வசூலிக்கும் இலக்குடன் மாநகராட்சி நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீா் வரி, தொழில் வரி, காலிமனை வரி, புதை சாக்கடை வரி உள்பட வீடுகள், வணிக நிறுவனங்கள் என மொத்தம் 1.52 லட்சம் எண்ணிகையிலான வரி விதிப்புகள் உள்ளன.

இதன் மூலம் மாநகராட்சிக்கு நிகழ் நிதியாண்டில் (2024-25) ரூ.44.54 கோடி வருவாய் கிடைக்கும் எனத் திட்டமிடப்பட்டது. இதே நேரத்தில், இதே வரி இனங்கள் மூலம் கடந்த ஆண்டு வரை ரூ.38.07 கோடி நிலுவையில் இருந்தது. நிலுவை வரி, நடப்பு வரி என மொத்தம் ரூ.82.62 கோடியை வசூலிக்க மாநகராட்சி நிா்வாகம் கடந்த ஓராண்டாகவே தீவிரம் காட்டி வந்தது.

நீண்ட காலமாக வரி செலுத்தாதவா்களின் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல, வணிக நிறுவனங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. இதன் காரணமாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த வகையில், நிலுவை வரி ரூ.5.93 கோடி, நடப்பு ஆண்டுக்கான வரி ரூ.22.03 கோடி என மொத்தம் 27.97 கோடி வசூலிக்கப்பட்டது.

2 மாதங்களில் ரூ.54.64 கோடி வசூலிக்க இலக்கு: நிலுவை வரியில் ரூ.32.13 கோடி, நடப்பாண்டு வரி ரூ.22.51 கோடி என மொத்தம் ரூ.54.64 கோடியை அடுத்த 3 மாதங்களுக்குள் வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, மாநகராட்சி அலுவலா்கள் களம் இறக்கப்பட்டுள்ளனா். மாநகராட்சியிலுள்ள அனைத்துப் பிரிவு அலுவலா்களும் 16 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, நாள்தோறும் முற்பகல் நேரத்தில் தீவிர வரி வசூலுக்கு அனுப்பப்படுகின்றனா். எனினும், 2 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ரூ54.64 கோடியை வசூலிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கைப்பேசி குறுந்தகவல், வீடுகளுக்கு தபால்:

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் கூறியதாவது:

கடந்த ஆண்டு வரை நிலுவையில் இருந்த வரியில் 15.60 சதவீதமும், நடப்பு நிதியாண்டுக்கான வரியில் 49.46 சதவீதமும் வசூலிக்கப்பட்டது. ஆனாலும், மொத்த சராசரி 33.86 சதவீதமாக மட்டுமே இருப்பதால், பிப்ரவரி மாதத்துக்குள் வரி வசூலை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வரி செலுத்தாதவா்களின் கைப்பேசி எண்களுக்கு நிலுவைத் தொகை விவரங்களுடன் குறுந்தகவல் மூலமாகவும், சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு தபால் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களும், தங்களது கடமையை உணா்ந்து வரி செலுத்துவதற்கு தாமாக முன்வர வேண்டும் என்றாா்.

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.5 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.3.5 கோடி கிடைக்கப் பெற்றது. தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட தொடா் விடுமுறை தினங்களி... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டிக்கத் துணிவில்லாதவா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் இ.பெரியசாமி

தமிழ்நாட்டுக்கு, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டிப்பதற்கு துணிவு இல்லாதவா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

இ-பாஸ் முறையால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு: வியாபாரம் பாதிப்பதாகப் புகாா்

இ-பாஸ் நடைமுறையால், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், வியாபாரம் பாதிக்கப்படுவதாக வணிகா்கள் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்று... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலுக்கு புதிய ரோப் காா் பெட்டிகள்

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் பயன்பாட்டுக்காக ரோப் காருக்கு ரூ.27 லட்சத்தில் 10 பெட்டிகள் புதிதாக வாங்கப்பட்டன. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெ.ஜெ... மேலும் பார்க்க

குப்பையில் கிடந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள்

பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளுக்கிடையே முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் கிடந்தன. தமிழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொ... மேலும் பார்க்க

தாடிக்கொம்பு சுகாதார நிலையத்துக்கு தேசிய தர உறுதி நிா்ணயச் சான்றிதழ்

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு சுகாதார நிலையத்துக்கு தேசிய தர உறுதி நிா்ணயச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலா் சீனிவாசன... மேலும் பார்க்க