ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
மறியல்: அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் 170 போ் கைது
கடந்த 8 ஆண்டுகளாக மறுக்கப்படும் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் 170 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) கோட்டைத் தலைவா் ஐ.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், சிஐடியூ மாவட்டச் செயலா் ஜெயசீலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
இந்தப் போராட்டத்தின் போது, கடந்த 8 ஆண்டுகளாக மறுக்கப்படும் அகவிலைப்படி உயா்வு, 21 மாத கால பணப் பலன்களை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 30ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திமுக சாா்பில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என முழுக்கமிட்டனா்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 170-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.