கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
Game Changer: `எங்களுடைய உழைப்புக்கு சம்பளம் கொடுக்கல' - காவல் நிலையத்தில் புகாரளித்த நடிகர்கள்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கடந்த மாதம் `கேம் சேஞ்சர்' திரைப்படம் வெளியாகியிருந்தது.
தில் ராஜு தயாரித்திருந்த இத்திரைப்படத்திற்கு தற்போது ஒரு சிக்கல் வந்திருக்கிறது. இப்படத்தின் காட்சிகளில் நடித்த ஜூனியர் ஆர்டிஸ்ட் நடிகர்கள் தங்களுக்கு இப்படத்தில் நடித்ததற்கு சம்பளம் கொடுக்கவில்லை என காவல் துறையில் புகாரளித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்களிடம் ஒவ்வொருவருக்கும் 1200 ரூபாய் சம்பளமாக கொடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இவர்களில் இன்னும் 350 நபருக்கு படத்தில் நடித்ததற்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள். `நாங்கள் செலுத்திய நேரத்திற்கும் , உழைப்புக்கும் ஊதியம் கொடுக்கப்படவில்லை' என அந்த நடிகர்கள் தற்போது குண்டூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக குண்டூர் மற்றும் விஜயவாடா பகுதிகளிலிருந்து ஹதராபாத்துக்கு நடிகர்கள் சென்றிருக்கிறார்கள். ``இப்படத்தில் நடித்ததற்குப் பிறகு அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்படும் என இப்படத்தின் இணை இயக்குநர் தெரிவித்தார்.'' என 350 ஜூனியர் ஆர்டிஸ்ட்களில் ஒருவரான தருண் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் தற்போது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மேலும், இயக்குநர் ஷங்கரும் தயாரிப்பாளர் தில் ராஜூவும் இந்த விஷயத்தில் தலையிட்டு நடிகர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டதா என்பது குறித்து உறுதி செய்யவும் வலியுறுத்தியிருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, அந்த இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.