செய்திகள் :

Gaza : முடிவுக்கு வரும் காஸா போர் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

post image

காஸாவில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் காஸாவில் கடந்த 15 மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போரானது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதனை தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.இந்த போரில் இது வரை 46,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும் என்ற அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன. இந்நிலையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பிணைய கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல் அளித்து உள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிறார். நான் பதவி ஏற்று இரண்டு வாரங்களுக்குள் பிணைய கைதிகளை விடுவிக்க வில்லை என்றால், ஹமாஸ் அமைப்பினர் சில மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை கொடுத்து இருந்தார். இந்த நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

“அடுத்த 6 வார காலத்திற்குள் முதற்கட்ட போர் நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த காலகட்டத்தில் காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறும். ஹமாஸ் படைகள் பிடியில் எஞ்சியுள்ள பிணைய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதன் பிறகு இஸ்ரேலின் பிடியில் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்களும் விடுவிக்கப்படுவார்கள்” என பாதுகாப்பு அதிகாரிகள் வட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, ஹமாஸ் அமைப்பினர் பாதுகாப்புத் தடைகளை மீறி, 1,200 வீரர்கள் மற்றும் பொதுமக்களைக் கொன்று, 250க்கும் மேற்பட்ட மக்களை பிணைய கைதிகளை கடத்திச் சென்றதை தொடர்ந்து, இஸ்ரேலிய ராணுவம் காஸா மீது தாக்குல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்த நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், பலரை பிணையகைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதில் அந்த பகுதியில் பல்லாயிரகணக்கானோர் உயிரிழந்ததை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறினர்.

போரின் போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் அகதிகள் மீதும் இஸ்ரேல் ராக்கெட் லான்ஜர் மூலம் தாக்குதல் நடத்தி இருந்தது. இந்த தாக்குதலில் ஐ.நா ஊழியர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதில் அளித்து இருந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் அந்த பகுதியில் இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறி இருந்தது.

இதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தரும் மற்ற நாடுகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்தது. அதன்படி லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லாக்கள் மீதும் மற்றும் ஏமன் நாட்டின் ஹைத்திகள் மீதும் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். சுமார் 15 மாத காலமாக நீடித்த இந்த போரின் காரணமாக இது வரை 46,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என்ற தகவல்கள் கிடைத்து உள்ளன. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முயற்சித்து வந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இரு தரப்பினரும் பிணைய கைதிகளை விடுவிக்க ஒப்பு கொண்டுள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து டொனால்டு டிரம்ப்

போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து - டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டு உள்ள பதிவில், “மேற்காசியாவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் விவகாரத்தில் சமரசத்தை எட்டியுள்ளோம். பிணைக்கைதிகளை மீட்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டு உள்ளது. விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

கழுகார் : `சாட்டைப் புள்ளியின் 100 ஸ்வீட் பாக்ஸுகள் டு பலே ‘கணக்கு’ போட்ட கதைசொல்லியார்’

பகை மறந்த இரு துருவங்கள்!பதவிக்குக் குறிவைக்கும் முன்று வாரிசுகள்...‘ஜில்’ மாவட்ட சூரியக் கட்சியில், மாவட்டப் புள்ளிக்கும், பதவியிறக்கம் செய்யப்பட்ட ‘வில்’ புள்ளிக்கும் இடையிலான கோஷ்டிப்பூசல் ஊரறிந்த ... மேலும் பார்க்க

``பொன்முடி மீது சேறு வீசியதாக இருவேல்பட்டு கிராமத்தினரை கைதுசெய்வதா..?" - சீமான் கண்டனம்

கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அப்போது, விழுப்புரம் பகுதியில் பாதிக்கப... மேலும் பார்க்க

`விடுதலை படம் டு வாச்சாத்தி கொடூரம்..!’ - சிபிஎம் பெ.சண்முகம் விரிவான பேட்டி

விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வாகியிருக்கிறார் பெ.சண்முகம். அவரை நேரில் சந்தித்து, விடுதலை படம், வாச்சாத்தி சம்பவம்... மேலும் பார்க்க

Meta : 'கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு' - மார்க் கருத்துக்கு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா

இந்தியாவின் பொது தேர்தல் வெற்றி குறித்து தவறான கருத்து தெரிவித்த மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சார்பாக மெட்டா நிறுவனம் தற்பொழுது மன்னிப்பு கோரி உள்ளது. கடந்த ஜனவரி 10ஆம் தேதி பாட்காஸ்ட் (Podcas... மேலும் பார்க்க

'ரூ.100.92 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய ED' - அதிர்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கிறார். இந்த ... மேலும் பார்க்க