செய்திகள் :

Health: ஆரோக்கியமா இருக்கணுமா? சைக்கிளிங் செய்யுங்க... ஏனெனில்?!

post image

உடல் பருமன் பிரச்னை இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பவர்களுக்கும்கூட சைக்கிளிங் மிக நல்லதோர் உடற்பயிற்சிதான். சைக்கிளிங்கை எப்படி செய்ய வேண்டும், யாரெல்லாம் செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும், எந்த நேரத்தில் செய்வது பெஸ்ட் உள்ளிட்ட தகவல்களைச் சொல்கிறார் ஃபிட்னஸ் டிரெய்னர் ஜெயக்குமார்.

cycling

சைக்கிளிங் பலன்கள்..!

உடலில் இருக்கிற தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் சைக்கிளிங் பெஸ்ட் உடற்பயிற்சி. சைக்கிளிங் செய்யும்போது நுறையீரல் ஆக்ஸிஜனை அதிகமாக எடுக்கும். அதனால் இதயத்தின் ஆரோக்கியமும் நுரையீரலில் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கூடவே உடலின் செல்களுக்கும் ஆக்ஸிஜன் அதிகமாகக் கிடைக்கும். ரத்தஓட்டம் அதிகரிக்கும். சைக்கிளிங் செய்பவர்களின் நுரையீரலை அவ்வளவு சுலபமாக தொற்றுநோய் கிருமிகள் தொட்டுவிட முடியாது.

சைக்கிளிங் செய்ய வேண்டிய நேரம்!

அதிகாலை நேரங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் அதிகம் கிடைக்கும் என்பதால் இதுதான் சைக்கிளிங் செய்வதற்கு மிகச்சரியான நேரம்.

சைக்கிளிங்

சைக்கிளிங் செய்யக்கூடாத நேரம்!

காலை, மாலை என எப்போது வேண்டுமானாலும் சைக்கிளிங் செய்யலாம். செய்யக்கூடாத நேரம் என்று எதுவும் கிடையாது. உங்களுடைய செளகரியம்தான். ஆனால், சைக்கிளிங் செய்கிற நேரத்தில் பாதி வயிறாவது காலியாக இருக்க வேண்டும்.

ஏன் சாப்பிட்டவுடனே சைக்கிளிங் செய்யக்கூடாது?

சாப்பிட்டு ஒன்றரைமணி நேரம் கழித்துதான் சைக்கிளிங் செய்ய வேண்டும். சாப்பிட்ட உடனே சைக்கிளிங் செய்தீர்களென்றால், உடலின் ரத்த ஓட்டமானது கால்களுக்கும் குறிப்பாக தொடைகளுக்கும் அதிகமாக பாய ஆரம்பித்துவிடும். இதனால் உணவு செரிமானத்தில் பிரச்னை ஏற்பட்டுவிடும்.

உடல் பருமன்

சைக்கிளிங் மூலம் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

அதிகப்படியான உடல் பருமன் அல்லது கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள் ஜஸ்ட் அரை மணி நேரம் மட்டும் சைக்கிளிங் செய்தீர்களென்றால் உங்களுக்கு பலன் கிடைக்காது. ஏனென்றால் முதல் 20 நிமிடங்கள் சைக்கிளிங் செய்வதற்கான எனர்ஜிக்கு, உடல் தன்னிடம் இருக்கிற அதிகப்படியான சர்க்கரைச் சத்தை எடுக்கும். அதன்பிறகும் தொடர்ந்து நீங்கள் சைக்கிளிங் செய்யும்போதுதான், உடலானது கொழுப்பைக் கரைத்து தனக்கான எனர்ஜியை எடுக்க ஆரம்பிக்கும். அதனால், உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றாலோ, அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க வேண்டுமென்றாலோ தினமும் ஒரு மணி நேரம் சைக்கிளிங் செய்ய வேண்டும்.

சைக்கிளிங் செய்வதற்கு வயது கட்டுப்பாடு இருக்கிறதா?

எதுவுமே கிடையாது. சைக்கிள் ஓட்டத் தெரிந்த பேரன், பேத்தியில் ஆரம்பித்தது, ஆர்வம் இருக்கிற தாத்தா, பாட்டி வரைக்கும் யார் வேண்டுமானாலும் சைக்கிளிங் செய்யலாம்.

ஜாகிங்

ஜாகிங்கைவிட சைக்கிளிங் நல்லது... ஏன் தெரியுமா?

ஜாகிங் செய்யும்போது, பாதங்கள் தரையில் தட் தட் என்று அதிரும்போது கால் முட்டுகள், இடுப்பின் இணைவுகள், கழுத்துப்பகுதியிலும் அதிர்வு ஏற்படும். இதனால் ஏற்கெனவே இந்தப்பகுதிகளில் வலி இருப்பவர்களுக்கு வலி இன்னும் அதிகமாகும். ஆனால், சைக்கிளிங்கில் இந்த மாதிரி அதிர்வுகள் கிடையாது. அதனால், மூட்டுவலி இருப்பவர்களும் சைக்கிளிங் செய்யலாம். மூட்டுவலி பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு இனிமேல் வராமலும் தடுக்கும் சைக்கிளிங்.

இவர்கள் சைக்கிளிங் செய்யக்கூடாது... ஏன்?

இதுவரை எந்த உடற்பயிற்சியும் சைக்கிளிங்கும் செய்யாமல் இருந்தவர்கள், திடீரென்று தங்கள் 40 வயதில் இதையெல்லாம் செய்ய ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தையும் ரத்த அழுத்தத்தையும், மருத்துவரிடம் பரிசோதித்துப் பார்த்து நார்மல் என்றால் மட்டுமே சைக்கிளிங் செய்ய வேண்டும். ஏனென்றால், உங்களுக்குத் தெரியாமல் சின்னதாக இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால், திடீரென சைக்கிளிங் செய்யும்போது பாதிப்பு ஏற்படுத்தலாம். இதேபோல், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, அது தெரியாமல் நீங்கள் திடீரென சைக்கிளிங் செய்ய ஆரம்பித்தால் பக்கவாதம் போன்ற பிரச்னைகளும் வரலாம். வயது 40-க்கும் குறைவு என்றாலும் அதிகப்படியான உடல் எடைக்கொண்டவர்கள் புதிதாக சைக்கிளிங் செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்றால், மருத்துவரை ஆலோசித்துவிட்டு சைக்கிளிங் செய்ய ஆரம்பியுங்கள்.

cycling

முதல்நாளே ஒரு மணி நேரம் ஓட்டலாமா?

கூடவே கூடாது. முதல் நாள் 10 நிமிடம், அடுத்த நாள் 15 நிமிடம், அதற்கடுத்த 20 நிமிடம் படிப்படியாக சைக்கிளிங் நேரத்தை அதிகரியுங்கள். இதையும், ஆரம்ப நாள்களில் காலையில் அரைமணி நேரம், மாலையில் அரைமணி நேரம் பிரித்தும் செய்யலாம்.

Stay Healthy..!

நின்ற இதயம், 120 நிமிடங்கள் கழித்து துடித்தது... ஒடிசாவில் நடந்த மெடிக்கல் மிராக்கிள்!

eCPR சிகிச்சை மூலம் இதயத்துடிப்பு நின்ற 120 நிமிடங்களுக்குப் பிறகு, நோயாளி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில் நாயகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட 90... மேலும் பார்க்க

Health: பச்சையா, வறுத்ததா, வேக வைத்ததா... வேர்க்கடலையில் எது நல்லது?

எல்லாருக்கும் பிடிச்ச ஒரு தின்பண்டம் வேர்க்கடலை. சிலருக்கு பச்சையா சாப்பிட பிடிக்கும். சிலருக்கு ரோட்டோரங்கள்ல உப்புத்தண்ணி தெளிச்சு வறுத்து தர்ற வேர்க்கடலை பிடிக்கும். இன்னும் சிலருக்கு வேக வெச்ச வே... மேலும் பார்க்க

வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..?

எல்லோருமே ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம்.ஆனால், அனைவருக்கும் இது சாத்தியம் இல்லை. அதனாலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களை 'ஆஹோ ஓ... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் தோல் குழந்தைகள்: காரணம் என்ன? தீர்வு இருக்கிறதா? - நிபுணர் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னாள், ராஜஸ்தானின் பிகானரிலுள்ள மருத்துவமனையில் பிளாஸ்டிக் போன்ற கடினமான தோலுடன் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அனைவரும் அறிவோம். ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் (Harlequin-type i... மேலும் பார்க்க

MIOT: அறுவை சிகிச்சை மீதான அச்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி; ரோபோடிக் அறுவை சிகிச்சை

மியாட் மருத்துவமனை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்குவதற்கும், அவர்களது விளைவுகளை மேம்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.இன்றைய உலகில் அதிந... மேலும் பார்க்க

Doctor Vikatan: 'பிக் பாஸ்' போட்டியாளர் சௌந்தர்யாவின் குரல் பிரச்னை... தீர்வு உண்டா?

Doctor Vikatan:விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சௌந்தர்யா என்பவருக்கு குரல் தொடர்பான பிரச்னை இருக்கிறது. அவர் இருவிதமான குரல்களில் பேசுகிறார். சிறுவயதில் தன் குரலை வைத... மேலும் பார்க்க