செய்திகள் :

Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?

post image

பாடி பாசிட்டிவிட்டி அனைவரும் அறிந்ததுதான். என் உடல் எப்படியிருந்தாலும் அதை நான் நேசிப்பேன், கொண்டாடுவேன் என்பதுதான் பாடி பாசிட்டிவிட்டி. தற்போது 'பாடி நியூட்ராலிட்டி'யும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. உருவத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, உடலின் செயல்பாடு மற்றும் திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான் பாடி நியூட்ராலிட்டி.

கேரளாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சு சம்சனின் மனைவி சாருலதாகூட, சமீபத்தில் தனது உடல் குறைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் உடல் பாசிட்டிவாக இருப்பதைவிட நியூட்ரலாக இருப்பது சிறந்தது என்று குறிப்பிட்டிருந்தார். உடல் பாசிட்டிவாக இருப்பது நல்லதா அல்லது நடுநிலைமை என்று சொல்லப்படும் நியூட்ரலாக இருப்பது நல்லதா என்று சைக்காலஜிஸ்ட் சாஹித்யா ரகு அவர்களிடம் கேட்டோம்.

Body positivity
Body positivity

"பொதுவாக உடல் எடை கூடுதலாக இருப்பவர்களுக்கு, அதன் காரணமாக அவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு‌ ஏதும் ஏற்படாதபட்சத்தில், அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கும்பட்சத்தில்‌ உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பது சிலர் கருத்து. உதாரணத்துக்கு, பெண்களுக்கு மகப்பேறுக்குப் பின் உடல் எடை கூடலாம்.  உடல் வடிவமாக இருக்கிறதா, சரியான எடையில் இருக்கிறதா என்பது போன்ற அழகியல் கோட்பாடுகளுக்கு கீழ் இருக்க விரும்பினாலும், மகப்பேறு போன்ற தவிர்க்க முடியாத காரணத்தால் உடல் எடை அதிகமாகி விட்டால், என் உடல் எப்படியிருந்தாலும் அதை நான் நேசிப்பேன், அதை அப்படியே ஏற்றுக்கொள்வேன் என்று முடிவெடுத்து விடுவார்கள் சில பெண்கள். இதுதான் பாடி பாசிட்டிவிட்டி. இவர்கள் சமூகம் தருகிற அழகு, உடல்வாகு தொடர்பான அழுத்தங்களைப் புறக்கணித்து விடுவார்கள்.

தன்னுடைய உடல் எப்படியிருக்கிறது என்பதைவிட, அது தனக்காக எப்படியெல்லாம் உழைக்கிறது என்பதை கவனித்து நிறைவடைகிற ஒரு மனநிலையே பாடி நியூட்ராலிட்டி. இதில், 'எப்படியிருந்தாலும் நான் என் உடம்பை நேசிப்பேன்' என்கிற எண்ணமும் இருக்காது. 'எப்படியிருந்தாலும் என் அழகுல ஏதோ ஒண்ணு குறையுதே' என்கிற தவிப்பும் இருக்காது. பாடி நியூட்ராலிட்டிக்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், 'உன்னோட கால் பார்க்க அழகாவே இல்ல' என்று யாராவது கிண்டல் செய்தால், 'என்னோட கால் ஸ்ட்ராங்கா இருக்கு. நான் எவ்ளோ தூரம் நடந்தாலும் கால் வலிக்காது' என்று அதன் திறமையை அல்லது உழைப்பை எடுத்துச்சொல்வார்கள்.

Body negativity
Body negativity

பாடி நியூட்ராலிட்டி எண்ணத்துடன் இருப்பவர்கள், பிறருடைய உருவ கேலிகளுக்கு மனமுடைய மாட்டார்கள்; தன்னுடைய உடல் தோற்றத்தை எப்போதும் மதிப்பிட்டுக்கொண்டே இருக்க மாட்டார்கள்; உடல் அழகின் மீது ஆசை அல்லது பற்று வைக்க மாட்டார்கள். கஷ்டப்பட்டாவது உடற்பயிற்சிகள் செய்து உடலை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு உடல் பராமரிப்பை கடினமான செயலாக பார்க்காமல், 'டெய்லி கொஞ்ச நேரம் நடந்தா ஹெல்த்துக்கு நல்லது' என்கிற மகிழ்ச்சியுடன் வாக்கிங் செல்வார்கள்.

'அந்த நடிகைபோல என் உடல் இருக்க வேண்டும்; இந்த ஆளுமைபோல ஸ்டைலிஷ்ஷாக இருக்க வேண்டும்' என்பதுபோல மீடியாக்களில் பார்ப்பதையெல்லாம் தன் உடல் மீது பொருத்திப்பார்க்கிற பாடி நெகட்டிவிட்டி இல்லாமல், 'என்னைப்போல தான் நான் இருப்பேன்' என்பதில் தெளிவாக இருப்பார்கள். இந்தத் தெளிவும் வலிந்து வரவழைக்கப்பட்டதாக இருக்காது என்பதுதான் பாடி நியூட்ராலிட்டியின் தனிச்சிறப்பே.

சைக்காலஜிஸ்ட் சாஹித்யா ரகு
சைக்காலஜிஸ்ட் சாஹித்யா ரகு

தற்போது, அதிகம் பேர் உடற்பயிற்சிக் கூடங்களை நோக்கி படை எடுக்கின்றனர். அது மற்றவர்களுக்காக அல்லாமல் தனக்கென, தனது மனநிலை மற்றும் உடல் நிலைக்காகவே உடற்பயிற்சியில் ஈடுபடுகிறேன் என்ற எண்ணத்தை உருவாக்கிக்கொள்வது பாடி நியூட்ராலிட்டி. பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது உங்களுடைய தேர்வு என்பதை நீங்கள்தான் முடிவெடுத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும்'' என்கிறார் சைக்காலஜிஸ்ட் சாஹித்யா ரகு.

மாநில சுயாட்சி: அரசியல் செய்வது DMK-வா? BJP-அ? | Aazhi Senthilnathan Interview | MK Stalin | Modi

மாநில சுயாட்சி தமிழக அரசியலில் மீண்டும் விவாதமாகியிருக்கிறது. மாநில சுயாட்சி அரசியலை திமுக இப்போது முன்னெடுக்க காரணம் என்ன? அரசியல் செய்வது யார் என்பது குறித்து பதிலளிக்கிறார் சமூக செயற்பாட்டாளர் ஆழி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஐஸ் வாட்டர் குடித்தால் TB நோய் வருமா?

Doctor Vikatan: ஐஸ் வாட்டர் குடித்தால், நுரையீரல் தொற்று ஏற்படுமா... சாதா தண்ணீர் குடித்தால், தாகம் அடங்குவதில்லை. அதனால், தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் வாட்டரை குடித்துவருகிறேன். திடீரென்று நுரையீரல... மேலும் பார்க்க

``450 நாள் ரெக்கார்டை பிரேக் செய்து, செந்தில் பாலாஜி மீண்டும் சிறையில் இருப்பார்'' - வினோஜ் செல்வம்

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஒரு மாநாட்டு நிகழ்வில், பா.ஜ.க இளைஞர் அணிச் செயலாளர் வினோஜ் செல்வம் கலந்துகொண்டு பேசுகையில்,புதுக்கோட்டை நிகழ்ச்சியில், பா.ஜ.க இளைஞர் அணிச் செயலாளர் வினோஜ் செல்வம்அதிம... மேலும் பார்க்க

``மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எடுத்த முயற்சி, நாடு முழுவதும் எதிரொலிக்கும்..'' - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் தி.மு.க விவசாயத் தொழிலாளர் அணி சார்பில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கருத்தரங்கில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,"தமிழ்நாட்டில் பள்ளிக்... மேலும் பார்க்க

``யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தார்கள்..'' - அகிலேஷ் யாதவ் சொல்வது என்ன?

கும்ப மேளாவில் நடக்கவிருந்த அரசியல் குறித்து நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சமஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது, "கும்பமேளாவில் ... மேலும் பார்க்க