செய்திகள் :

Health: ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்! - ஏன் நமக்கு அவசியம்?

post image

''உடலுக்கு நன்மை செய்யும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமில (Polyunsaturated fatty acids) வகையைச் சேர்ந்தது, ஒமேகா 3 கொழுப்பு அமிலம். ஆரோக்கியமான மூளை வளர்ச்சி மற்றும் இயக்கம், இதய ரத்த நாள செயல்பாட்டுக்கும் இது அவசியம். புற்றுநோய், மனஅழுத்தம், நினைவுத்திறன் குறைபாடு, ஃபேட்டி லிவர் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவும், வந்தபின் அளிக்கப்படும் சிகிச்சையிலும் இதற்கு முக்கிய பங்கு உள்ளது'' என்கிற பொதுநல மருத்துவர் கு.கணேசன், அதன் பலன்கள் பற்றி விவரிக்கிறார்.

ஒமேகா 3
ஒமேகா 3

''டிரைகிளிசரைட் அளவைக் குறைப்பதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடலால் உருவாக்க முடியாது. எனவே, இதை உணவின் மூலம் எடுத்துக்கொள்வது அவசியம். எண்ணெய் சத்துமிக்க மீன், வால்நட், ஃபிளாக்ஸ் சீட் எனப்படும் ஆளி விதை போன்றவற்றில் இருந்து போதுமான அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்கிறது.

தினமும் 0.3-0.5 கிராம் இ.பி.ஏ (Eicosapentaenoic acid) மற்றும் டி.ஹெச்.ஏ (Docosahexaenoic acid) வகையும், 0.8-1.1 கிராம் ஏ.எல்.ஏ (Alpha-Linolenic acid) வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

ஒமேகா 3
மீன்

மீன் போன்ற கடல் உணவுகளில் இருந்து கிடைக்கும் இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை நம்முடைய உடல் நேரடியாக பயன்படுத்திக்கொள்ளும்.

வால்நட் போன்ற கொட்டைகளில் இருந்து கிடைக்கும் ஏ.எல்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை உடல், இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலமாக மாற்றித்தான் பயன்படுத்த வேண்டி இருக்கும். உடலுக்குத் தேவையான வகையில் மாற்றும் திறன் சிலருக்கு குறைவாக இருக்கும். அவர்கள், டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் மாத்திரையாக எடுத்துக்கொள்ளலாம்'' என்கிறார் டாக்டர் கு.கணேசன்.

Health: இனி ஹெல்தியா ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்! - செய்முறையும் பலன்களும்..!

நொறுக்குத்தீனி என்றாலே, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, உருளைக்கிழங்கு சிப்ஸ், கார்ன், சாட் உணவுகள்தான் என்றாகிப்போன காலம் இது. அதிக அளவு கொழுப்பு மற்றும் ரசாயனங்கள் நிறைந்த செயற்கையான ஸ்நாக்ஸ்களைத் தொட... மேலும் பார்க்க

இரத்த நாள அழற்சி: நவீன சிகிச்சை முறையைப் பயன்படுத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ரெட்ரோகிரேட் இண்ட்ரா-ரீனல் சர்ஜரி (RIRS) எனப்படும் சிகிச்சை மூலம்62 வயது பெண் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகத்தில் இருந்த இரண்டு பெரிய கற்கள் வெற்றிகரமா... மேலும் பார்க்க

No Tobacco Day: `உயிர் கொல்லும் புகையிலைக்கு நோ சொல்வோம்' - உலக புகையிலை ஒழிப்பு தினம் 2025

'புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்' இந்த வசனத்தை கேட்காத யாரும் இங்கே இல்லை. இருந்தும் இந்த வாக்கியத்தின் முக்கியத்துவத்தை அறியாத பலரும் இன்னும் இந்த புகையிலையை பயன்படுத்த ... மேலும் பார்க்க

Apollo: #OraLife வாய் புற்றுநோயை கண்டறிவதற்கான ஸ்க்ரீனிங் திட்டம் - அறிமுகப்படுத்திய அப்போலோ

புகையிலை பயன்பாடு என்பது ஒரு தனிநபர் தொடர்பான பழக்கவழக்கம் என்று சுருக்கிவிட முடியாது இதுவொரு தேசிய அளவிலான சுகாதார பெரும் பிரச்சனை. உலகளவில் எற்படும் வாய் புற்றுநோய் நபர்களில் ஏறக்குறைய 3 நபர்களில் ஒ... மேலும் பார்க்க

Apollo: உலக அவசர மருத்துவ தினம்; 1066 அவசர சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய அப்போலோ

சென்னை அப்போலோ மருத்துவமனைகள் (Apollo Hospitals], [World Emergency Medicine Day] கொண்டாடும் வகையில், 'ஃப்ளீட் ஆஃப் ஹோப்' [Fleet of Hope] என்ற மாபெரும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. உயிர்களைக் காப... மேலும் பார்க்க

டூ-வீலரில் பதுங்கும் பாம்புகள், விஷப்பூச்சிகள்... கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?

கோவை, நீலகிரி போன்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. மழைக்காலம் என்பதால் காட்டில் இருக்கும் பாம்பு, பூரான் என விஷ ஜந்துக்களெல்லாம் முன்னெச... மேலும் பார்க்க