செய்திகள் :

Health: மைக்ரேன் முதல் மலச்சிக்கல் வரை... பூக்களிலும் தீர்வு இருக்கு!

post image

தாமரையும் தாமரைத்தண்டும்..!

தாமரை

மருத்துவ குணங்கள் உள்ள தாவரங்களைத் தேடி அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டாம். நமக்கு எளிதாகக் கிடைக்கும் செடிகளும் மலர்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை தான். நமக்கு எளிதாகக் கிடைக்கிற மலர்கள் சிலவற்றின் மருத்துவ குணங்களை பகிர்ந்து கொள்கிறார் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு.

வெண் தாமரை மூளைக்கும், செந்தாமரை இதய வலுவுக்கும் நல்லது. கஷாயம் வைத்து 15 மில்லி வரை அருந்தலாம். தாமரைத்தண்டுக்கு கர்ப்பபையை வலுப்படுத்தும் தன்மை உண்டு.

ஆவாரம்பூவும் நீரிழிவும்..!

ஆவாரம்பூ!

நீரிழிவுக்கான சூரணத்தில் ஆவாரம்பூவையும் சேர்க்கிறோம். காய்ச்சிய பசும்பாலில் இரவு முழுக்க ஆவாரம்பூவை ஊற வைத்துக் குடித்தால் வெள்ளைப்படுதல் சரியாகும்.

புண்களை ஆற்றும் செம்பரத்தம் பூ!

செம்பருத்தி

நாம் செம்பருத்தி என்று சொல்லிக் கொண்டிருப்பது உண்மையில் `செம்பரத்தம் பூ'. செம்பருத்தி என்பது சிவப்பு நிற பூக்களைக் கொண்ட பருத்திச் செடியைக் குறிப்பிடுவது. செம்பரத்தம்தான் ஹைபிஸ்கஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இது இதயநோயை குணப்படுத்தும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. இந்தப் பூக்களில் இருக்கிற வழுவழுப்புத்தன்மை வாய், குடல், கர்ப்பபைப் புண்களை குணப்படுத்தும். சிவப்பு நிற ஒற்றையடுக்கு செம்பரத்தம் மட்டுமே மருத்துவ குணம் கொண்டது. மருந்தடிக்காத மலர்கள் என்றால் ஒன்றிரண்டை அப்படியே சாப்பிடலாம்.

கண்களுக்கு நந்தியாவட்டையும், வேப்பம்பூவும்!

வேப்பம் பூ

கண்கள் சிவந்து இருத்தல், கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு நந்தியா வட்டை மலர் சிறந்த மருந்து. எறும்புகள் இல்லாமல் சுத்தம் செய்த நந்தியாவட்டை பூக்களை கண்களின் மேல் வைத்து ஒரு துணியால் கட்டி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் விட்டுவிட வேண்டும். படிப்படியாக பிரச்னை சரியாகிவிடும். வேப்பம்பூக்களை அடிக்கடி உணவில் சேர்த்துவர கண் நோய் வராது; பார்வை கூர்மையாகும் என்று சித்தர் பாடல்கள் சொல்கின்றன.

பாலூட்டும் தாய்மார்களுக்கு மல்லிகை!

மல்லிகை

பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் கட்டுப் பிரச்னை அடிக்கடி வரும். மல்லிகை அல்லது முல்லையை அரைத்து மார்பில் பற்றுப்போட பால் கட்டு கரையும். தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புகிறவர்களும் இந்தப் பற்றை மார்பில் போட்டுக்கொள்ளலாம். ஆனால், பச்சை வண்ணமேற்றிய பூக்களைப் பயன்படுத்தக்கூடாது.

மலச்சிக்கலுக்கு மருந்தாகும் பன்னீர் ரோஜா!

ரோஜா

பன்னீர் ரோஜாக்களில் செய்யப்படுகிற குல்கந்து வயிற்றுப்புண்ணை ஆற்றும்; மலச்சிக்கலைத் தீர்க்கும்; மூலநோயை கட்டுக்குள் வைக்கும்; ரத்தச்சோகையை சரிசெய்யும்.

பல வண்ண ரோஜாக்களை எக்காரணம் கொண்டும் சாப்பிடக்கூடாது. நீரிழிவு பிரச்னை இருப்பவர்கள் குல்கந்து சாப்பிடக் கூடாது. அதேபோல, பன்னீர் ரோஜா இதழ்களைச் சாப்பிடுவதற்கு முன்னால், அதன்மேல் எந்த பூச்சிக்கொல்லி மருந்தும் தெளிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

தூக்கத்துக்கு மருதாணிப்பூ!

மருதாணி

தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள், மருதாணிப் பூக்களை உலர்த்தி தலையணை யாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம். மருதாணிப்பூவை ஊறவைத்த தண்ணீரில் குளித்தால் அம்மையால் வருகிற உடல் எரிச்சல் தணியும்.

ஒற்றைத் தலைவலிக்கு நொச்சிப்பூ!

நொச்சிப்பூ

`மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி பிரச்னை இருப்பவர்கள், நொச்சிப்பூக்களை உலர்த்தி தலையணையாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம். `அமீபியாசிஸ்' காரணமாக சீதபேதி வந்து அவஸ்தைப்படுபவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனையோடு நொச்சிப்பூ கஷாயம் அருந்தலாம்.

நித்ய கல்யாணி... நேரடியாகச் சாப்பிடலாமா?

நித்ய கல்யாணி

200 வருடங்களுக்கு முன்னால் நம் நாட்டுக்கு வந்த செடி இது. நித்ய கல்யாணிச் செடியிலிருந்து சத்துகளைப் பிரித்து புற்றுநோய்க்கான மருந்தில் சேர்க்கிறார்கள். இந்த மலரை நேரடியாக மருத்துவத்தில் பயன்படுத்துவதில்லை. மற்ற பூக்களைப்போல இது நேரடியாகச் சாப்பிடக்கூடியதும் அல்ல.

நின்ற இதயம், 120 நிமிடங்கள் கழித்து துடித்தது... ஒடிசாவில் நடந்த மெடிக்கல் மிராக்கிள்!

eCPR சிகிச்சை மூலம் இதயத்துடிப்பு நின்ற 120 நிமிடங்களுக்குப் பிறகு, நோயாளி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில் நாயகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட 90... மேலும் பார்க்க

Health: பச்சையா, வறுத்ததா, வேக வைத்ததா... வேர்க்கடலையில் எது நல்லது?

எல்லாருக்கும் பிடிச்ச ஒரு தின்பண்டம் வேர்க்கடலை. சிலருக்கு பச்சையா சாப்பிட பிடிக்கும். சிலருக்கு ரோட்டோரங்கள்ல உப்புத்தண்ணி தெளிச்சு வறுத்து தர்ற வேர்க்கடலை பிடிக்கும். இன்னும் சிலருக்கு வேக வெச்ச வே... மேலும் பார்க்க

வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..?

எல்லோருமே ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம்.ஆனால், அனைவருக்கும் இது சாத்தியம் இல்லை. அதனாலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களை 'ஆஹோ ஓ... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் தோல் குழந்தைகள்: காரணம் என்ன? தீர்வு இருக்கிறதா? - நிபுணர் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னாள், ராஜஸ்தானின் பிகானரிலுள்ள மருத்துவமனையில் பிளாஸ்டிக் போன்ற கடினமான தோலுடன் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அனைவரும் அறிவோம். ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் (Harlequin-type i... மேலும் பார்க்க

MIOT: அறுவை சிகிச்சை மீதான அச்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி; ரோபோடிக் அறுவை சிகிச்சை

மியாட் மருத்துவமனை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்குவதற்கும், அவர்களது விளைவுகளை மேம்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.இன்றைய உலகில் அதிந... மேலும் பார்க்க

Doctor Vikatan: 'பிக் பாஸ்' போட்டியாளர் சௌந்தர்யாவின் குரல் பிரச்னை... தீர்வு உண்டா?

Doctor Vikatan:விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சௌந்தர்யா என்பவருக்கு குரல் தொடர்பான பிரச்னை இருக்கிறது. அவர் இருவிதமான குரல்களில் பேசுகிறார். சிறுவயதில் தன் குரலை வைத... மேலும் பார்க்க