செய்திகள் :

Hero Vida Z: அட்டகாச லுக்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... நம்ம ஊருக்கு எப்போ வரும் தெரியுமா? | EICMA

post image

EICMA ஷோவில் ஹோண்டா ஆக்டிவாவை அறிமுகப்படுத்தி அதகளம் செய்தது மாதிரி, ஹீரோ மோட்டோ கார்ப்பும் தன் பங்குக்கு விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் Z எனும் மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது. 

இதை ‛இஸட்’ என்று சொல்லக்கூடாது. ‛ஸீ’ என்றே சொல்வது சரியாக இருக்கும். 

Hero Vida Z

மினிமலிஸ்ட்டிக் டிசைனில் பார்ப்பதற்கே கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்போல் இருக்கிறது விடா Z. அகலமான சீட், பில்லியனருக்கு பேக்ரெஸ்ட், டிஎஃப்டி டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே என்று ஒரு வாட்டமான ஃபேமிலி ஸ்கூட்டராக மட்டுமில்லை; மாடர்ன் ஸ்கூட்டராகவும் ஜொலித்தது. பில்லியனருக்கு பேக்ரெஸ்ட்டெல்லாம் க்ரூஸர் பைக்குகளில் இருக்கும் அம்சம்.

EICMA 2024: Hero Vida Z

ஆக்டிவாவைப்போலவே இதிலும் கழற்றி மாட்டிக் கொள்ளக்கூடிய பேட்டரி வசதி கொடுத்திருக்கிறார்கள். இதிலுள்ள PMSM (permanent magnet synchronous motor) ஒரு 125 சிசி ஸ்கூட்டரின் பெர்ஃபாமன்ஸைத் தரும். 

Hero Vida Z

இது மாடுலர் ஆர்க்கிடெச்சர் எனும் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. 2.2kWh மற்றும் 4.4kW என 2 பேட்டரி பேக்குகளையும் இந்த மோட்டார் சப்போர்ட் செய்யும். உங்கள் மொபைல் போனில் விடா ஆப்பை இன்ஸ்டால் செய்து கொண்டு சார்ஜிங், சர்வீஸ் முதல் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளலாம். கனெக்டிவிட்டி வசதிகளும் உண்டு. OTA (Over The Air) அப்டேட்டும் இருக்கிறது. வண்டி திருடுபோனால் அலெர்ட் செய்யும் ஜியோஃபென்சிங், இன்ஜின் இம்மொபைலைஸர் போன்ற அம்சங்கள் கொடுத்திருக்கிறார்கள். 

Hero Vida Z

நிற்க! இப்போதைக்கு இந்த விடா Z மாடல் ஐரோப்பா மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகளில் விற்பனைக்கு வருமாம்! ‛அப்போ இந்தியாவுக்கு?’ என்கிற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, ‛அடுத்த ஆண்டு வந்தாலும் வரும்’ என்று சூசமாகச் சொல்லியிருக்கிறது ஹீரோ.

Ola: `ரூ.39,999 -க்கு ஸ்கூட்டர்' - டபுள்ஸ் அடிக்க முடியாது; ஆனால் என்ன ஸ்பெஷல்?

ஸ்கூட்டர் செக்மென்ட்டில் இதுவரை ஓலா, B2B (Business to Business) எனும் கமர்ஷியல் செக்மென்ட் ஏரியாவில் நுழையவில்லை. இப்போது அதிலும் டயர் பதித்துவிட்டது ஓலா. ஆம், கிக் (Gig) எனும் பெயரில் ஒரு கமர்ஷியல் ... மேலும் பார்க்க

Honda Electric Scooters: ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்; என்ன ஸ்பெஷல்?

ஹோண்டா தங்களின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ஹோண்டா ஆக்டிவாதான் மார்க்கெட்டில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஆக்டிவாவுக்கு இருக்கும் மார்க... மேலும் பார்க்க

RapteeHV: `எலெக்ட்ரிக் கார் பிளக் மூலம் பைக் சார்ஜ்; புதுமைகள் பல கொண்ட T30’ - என்ன ஸ்பெஷல்?

RapteeHV T30 Electric Bike | Jayapradeep Vasudevan - Raptee.HVஎலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களுக்கான மார்க்கெட் விரிவடைகிற சூழலில் புதிய ஸ்டார்ட்-அப்கள் புதுபுது சாத்தியங்களோடு களமிறங்குகின்றன. அவற்றில... மேலும் பார்க்க

Aprilia Tuono 457: `ஏப்ரிலியா என்றாலே தரம்தான்’ - அடுத்த வருஷம் இந்தியாவுக்கு வருது Tuono 457| EICMA

நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றி... மேலும் பார்க்க

Hero Karizma XMR 250: செமயான ஸ்போர்ட்டி பைக் வரப் போகுது - ஹீரோ கரீஸ்மா XMR 250 | EICMA

நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றி... மேலும் பார்க்க

Hero Xpulse 210: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210-ல் `அட்வென்ச்சர் விரும்பிகள்' கேட்ட சூப்பர் வசதி! | EICMA 2024

EICMA ஷோவில் ஹீரோவும் தன் அதகளத்தைக் காட்டிவிட்டது. எக்ஸ்பல்ஸ் 200 பைக்கைப் பார்த்தாலே யாருக்கும் ராலியிலோ அல்லது ஏதாவது அட்வென்ச்சர் பந்தயத்திலோ கலந்து கொள்ள வேண்டும்போல் சட்டெனத் தோன்றும்.EIC... மேலும் பார்க்க