அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
Hindenburg: 'ஆன்சன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பாடு' - வசமாக சிக்கிய ஹிண்டன்பர்க் ஆண்டர்சன்?
கடந்த வாரம் ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கலைக்கப்போவதாக அறிவித்த அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் மீது தற்போது வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது.
கனடாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில், சந்தை மோசடி சம்பந்தமான வழக்கு ஒன்றில் ஆன்சன் ஹெட்ச் ஃபண்ட் நிறுவனம் குறித்து மார்க்கெட் ஃபிராட் என்னும் வலைதளம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. அதில் அந்த நிறுவனம் பல்வேறு தகவல்கள் மற்றும் தரவுகளை ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு தந்ததாக ஆன்சன் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளது வெளிவந்துள்ளது.
அதன் படி, அறிக்கைகளை தயார் செய்யும்போது ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆன்சன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு மற்றும் எக்சேஞ்ச் கமிஷன் சட்டத்தின் படி, ஒரு நிறுவனம் தன் பெயரை அல்லது பங்களிப்பை குறிப்பிடாமல் அல்லது மறைத்து மற்ற பிற நிறுவனங்கள் குறித்து அறிக்கையை வெளியிடக்கூடாது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆரம்பத்தில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை கடன் வாங்கி விற்று, பின்னர் தான் பங்குகளை விற்ற நிறுவனம் குறித்து அறிக்கையை வெளியிட்டு, அதன் பங்குகளை சரிய செய்தப்பின்னர், மீண்டும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி தான் முன்னர் கடனை அடைத்துள்ளது. இவற்றை ஒரு ஹெட்ச் நிறுவனத்தின் கூட்டுடன் செய்யும்போது, அதில் ஏகப்பட்ட மோசடிகள், பங்குகளை இன்னும் சரிய செய்வதற்கான ஏகப்பட்ட வேலைகள் நடந்திருக்கலாம்.
இந்தப் புகாரை முன்வைத்துள்ள மார்க்கெட் பிராட் வலைதளம், "ஆன்சன் நிறுவனம் மற்றும் ஆண்டர்சனுக்கு இடையில் நடந்துள்ள இமெயில் பேச்சுவார்த்தைகள் மூலம் ஆண்டர்சன் ஆன்சன் நிறுவனத்திற்காக வேலை பார்த்திருக்கிறார். பங்கு மதிப்பு முதல் அறிக்கையில் என்ன இருக்க வேண்டும்... இருக்கக்கூடாது வரை ஆன்சன் நிறுவனம் என்ன கூறியதோ, அதை அப்படியே செய்திருக்கிறார் ஆண்டர்சன் என்பது தெரிய வந்துள்ளது.
ஆன்சன் மற்றும் ஹிண்டன்பர்க் இணைந்து ஏகப்பட்ட மோசடிகளை செய்துள்ளது. ஆனால், அதில் 5 சதவிகிதத்தை மட்டுமே நாங்கள் இப்போது கண்டுபிடித்திருக்கிறோம். இன்னும் இதுக்குறித்து இதில் செய்ய வேண்டியது அதிகம் இருக்கிறது. இனி அமெரிக்க பாதுகாப்பு மற்றும் எக்சேஞ்ச் கமிஷன் நிச்சயம் ஆண்டர்சன் மீது நடவடிக்கை எடுக்கும்" என்று கூறியுள்ளது.
இன்னும் ஹிண்டன்பர்க் நிறுவனம் எந்தெந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளது...எந்தெந்த மோசடிகள் செய்துள்ளது ஆகியவை இனி வெளிவரலாம்.