செய்திகள் :

IND vs Aus PM 11: அசத்திய இளம் வீரர்கள்... சொதப்பிய ரோஹித்; ஆஸி பிரதமர் அணியை வீழ்த்திய இந்தியா!

post image
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கும் இந்திய அணி, பி.எம் 11 எனப்படும் ஆஸ்திரேலிய பிரதமர் தேர்ந்தெடுத்த அந்நாட்டு வீரர்கள் அடங்கிய அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

முன்னதாக, இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் அழைத்து விருந்தளித்துக் கௌரவித்தார். அதைத்தொடர்ந்து, கான்பெராவில் நேற்று முன்தினம் பி.எம் 11 அணிக்கும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கும் இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் திட்டமிடப்பட்டது. முதல்நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டதைத்தொடர்ந்து, இரண்டாம் நாளான நேற்று போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் பில்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

ind vs PM 11

இதில், விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. ஜடேஜா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். அதேசமயம், சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இந்தப் பயிற்சி ஆட்டத்திலும் சேர்க்கப்படவில்லை. மழை காரணமாகப் போட்டி 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த பி.எம் 11 அணி 43.2 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பி.எம் 11 அணியில் சிறப்பாக ஆடிய 19 வயது தொடக்க ஆட்டக்காரர் சாம் கோஸ்டஸ், 97 பந்துகளில் 14 பவுண்டரிகள் 1 சிக்ஸ் என 107 ரன்கள் அடித்து அசத்தினார். அவருக்கு அடுத்தபடியாக, ஹெனோ ஜேக்கப்ஸ் 61 ரன்கள் எடுத்தார். மறுபக்கம், பந்துவீச்சில் ஹர்சித் ராணா 4 விக்கெட், ஆகாஷ் தீப் 2 விக்கெட், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ind vs PM 11

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பேட்டிங்கில், சுப்மன் கில் 50, ஜெய்ஸ்வால் 45, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 42 ரன்கள் அடித்தனர். இதில், ஓப்பனிங் இறங்குவார் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித், நான்காவது வீரராகக் களமிறங்கி 3 ரன்களில் அவுட்டானார். போட்டியின் முடிவில், ஆட்டநாயகன் விருது ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் சாம் கோஸ்டஸுக்கு வழங்கப்பட்டது.

வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) அடிலெய்டில் இரவு பகல் ஆட்டமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

`நாங்கள் பும்ராவை எதிர்கொண்டோம் என்று பேரக்குழந்தைகளிடம்..!’ - புகழ்ந்து தள்ளிய டிராவிஸ் ஹெட்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. முதல் போட்டியில் கே... மேலும் பார்க்க

Virat Kohli: `யாரும் செய்யாத சாதனை'- சாத்தியப்படுத்துவாரா கோலி?

சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்த வரலாற்றுத் தோல்வியுடன், பார்டர் கவாஸ்கரில் விளையாட ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பும்ரா தலைமையில் மாபெரும்... மேலும் பார்க்க

Jay Shah : `ஐ.சி.சியின் தலைவராக ஜெய்ஷா!' - முன் நிற்கும் சவால்கள் என்னென்ன?

கிரிக்கெட் உலகின் முக்கியப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார் ஜெய் ஷா. ஆம், நேற்று முதல் ஐ.சி.சியின் சேர்மன் பதவியை ஏற்றிருக்கிறார். இதுவரை பிசிசிஐயின் செயலாளராக இருந்து இந்திய கிரிக்கெட்டைக் கவனித்தவர், ... மேலும் பார்க்க

Deepak Chahar: "இதனால்தான் CSK என்னை எடுக்கவில்லை.." - IPL ஏலத்துக்குப் பின் மனம் திறந்த தீபக் சஹார்

ப்தேதிகளிசென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தன்னை ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எடுக்காதது குறித்து தீபக் சஹார் மனம் திறந்திருக்கிறார்.கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவில் ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெற்ற... மேலும் பார்க்க

Champions Trophy 2025: `ஹைபிரீட் முறையில் நடத்த தயார்! ஆனால்..' -பாகிஸ்தான் முன்வைக்கும் நிபந்தனைகள்

சாம்பியன்ஸ் டிராபி 2025 -ஐ பாகிஸ்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது முதல் இந்தியா பங்கேற்பது குறித்து பல சலசலப்புகள் ஏற்பட்டுவிட்டன. 26/11 மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தா... மேலும் பார்க்க

IPL 2025: கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வீரர்... விராட் கோலியை முந்திய வீரர் யார்?

ஐ.பி.எல் 2025-கான மெகா ஏலம் நிறைவடைந்திருக்கிறது. பல ஆச்சரியங்கள் நடந்துள்ள இந்த ஏலம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்த நம் பார்வையை மாற்றுவதாக அமைந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரிஷப் பண்... மேலும் பார்க்க