IND vs NZ: `இறுதிப்போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால்...' - கேன் வில்லயம்சன் பேசியதென்ன?
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கடத்தை நெருங்கி இருக்கிறது.
இந்தத் தொடருக்கான இறுதிப்போட்டி வரும் மார்ச் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் என டாப் 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் தற்போது இந்தியாவும்- நியூசிலாந்தும்தான் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன. எப்படியாவது இந்தத்தொடரில் வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் ஒரு அணிகளும் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லயம்சன் இந்திய அணி குறித்து, "இந்தியா ஒரு அற்புதமான அணி. சாம்பியன் டிராபி தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடிய ஆட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இறுதிப்போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அதில் எங்கள் திட்டத்தை தெளிவாக செயல்படுத்த வேண்டியது முக்கியமான விஷயம்" என்று பேசியுள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...