செய்திகள் :

IND vs NZ : ``நியூசிலாந்துக்கு எதிராக ஆடுவது சவால்தான், ஆனாலும்..." - டாஸில் ரோஹித் உறுதி

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதவிருக்கின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியின் டாஸ் முடிந்திருக்கிறது. நியூசிலாந்து அணிதான் டாஸை வென்றது. சாண்ட்னர் முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். ரோஹித் தொடர்ந்து 15 வது முறையாக டாஸில் தோற்றிருக்கிறார்.

Rohit

டாஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேசியதாவது, ``இங்கே நாங்கள் முதல் பேட்டிங்கும் செய்திருக்கிறோம். சேஸ் செய்திருக்கிறோம். எனக்கு முதலில் பேட்டிங் செய்வதிலும் சேஸ் செய்வதிலும் ஒன்றும் இல்லை. நாங்கள் கடந்த போட்டியில் நன்றாக சேஸூம் செய்திருக்கிறேன். நியூசிலாந்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனமாக இருக்க நினைக்கிறேன். டாஸை பற்றிக் கவலைப்படாமல் என்ன செய்கிறோமோ அதைச் சிறப்பாக செய்யவேண்டும் என்றே ட்ரெஸ்சிங் ரூமில் பேசியிருக்கிறோம். நியூசிலாந்து அணி கடந்த பல ஆண்டுகளாக மிகச்சிறந்த அணியாக ஆடி வருகிறார்கள்.

அதுவும் ஐ.சி.சி தொடர்களில் இன்னும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். இது எங்களுக்கு மற்றுமொரு சவால்தான். அவர்களை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை.' என்றார்.

Santner

டாஸில் நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர் பேசியதாவது, "இது நல்ல விக்கெட்டாக இருக்கிறது. கடந்த முறை இந்தியாவுடன் ஆடிய பிட்ச்சை போலத்தான் இருக்கிறது. கொஞ்சம் நல்ல ஸ்கோரை எடுத்து இந்தியாவின் மீது அழுத்தம் ஏற்ற வேண்டும். பிட்ச் போக போக மெதுவாகும் என நினைக்கிறேன். மேட் ஹென்றி இன்றைய அணியில் இல்லை. அவருக்கு பதில் ஸ்மித் அணியில் இருக்கிறார்." என்றார்.

Mitchell Santner : ``நாங்கள் மிகச்சிறந்த அணியிடம் தோற்றிருக்கிறோம்" - தோல்வி பற்றி சாண்ட்னர்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

Rohit Sharma Speech: ``இந்த அணி என்னை நம்புகிறது"- நெகிழ்ந்த ரோஹித்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

IND vs NZ: ``ஒரு அணியாக நிறைய சவால்களையும் அழுத்தங்களையும் சந்தித்திருக்கிறோம்'' - கே.எல்.ராகுல்

பரபரப்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. ரோகித் சர்மா2013க்குப் பிறகு மீண்டும் இந்திய... மேலும் பார்க்க

IND vs NZ: ``கே.எல். ராகுல் ஆடுவதைப் போன்ற ஷாட்களை வேறு யாராலும் ஆட முடியுமா!'' - ஹர்திக் பாண்டியா

பரபரப்பாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றிருக்கிறது. Rohit SharmaIND vs NZ: `பதறவைத்த நியூசிலாந்து; பதிலடி தந... மேலும் பார்க்க

Virat Kohli : ``நண்பர் வில்லியம்சனை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது; ஆனாலும்..." - கோலி நெகிழ்ச்சி

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற... மேலும் பார்க்க

Rohit Sharma: `கோப்பைகளோடு அரியணை ஏறும் ரோஹித்' - வாய்ப்புக்காக ஏங்கியிருந்தவன் உலகை வென்ற கதை

'தோனியின் அரியணையில் ரோஹித்!'சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தைத் தோற்கடித்து இந்திய அணி வென்றிருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெல்லும் இரண்டாவது ஐ.சி.சி கோப்பை இது. ... மேலும் பார்க்க