மருத்துவமனைக்குச் சென்ற பும்ரா..! அணியை வழிநடத்தும் விராட் கோலி!
Indonesia: நீல நிற கண்களுடன் பிறக்கும் பட்டன் பழங்குடியினர்... அறிவியல் காரணம் என்ன?
Indonesia: உலகம் முழுவதிலும் உள்ள காடுகளிலும் மலைகளிலும் கடலோரங்களிலும் இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்கள் உள்ளனர். ஒவ்வொரு பழங்குடி மக்களும் அவர்கள் வாழும் சூழலைப் பொருத்து வித்தியாசமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பர்.
பல்லாயிரம் ஆண்டுகலாக ஒரே மாதிரியான வாழ்க்கைமுறையை பின்பற்றும் சில பழங்குடியினர் தனித்துவமாக உடலமைப்பைப் பெற்றிருக்கின்றனர். அப்படி இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலாவெசி பிராந்தியத்தில் வசிக்கும் பட்டன் பழங்குடி மக்கள் தனித்துவமான நீல நிறக் கண்களைப் பெற்றிருக்கின்றனர்.
பொதுவாக மனிதர்களின் கருவிழி எனப்படும் ஐரிஸின் நிறம் பழுப்பு. நம் உடலில் இருக்கும் மெலனின் என்ற நிறமியின் சுரப்பைப் பொருத்து தோல், முடி மற்றும் கருவிழியின் நிறம் மாறுபடும்.
கருவிழியின் நிறம் ஐரிஸில் இருக்கும் சிறப்பு செல்களில் இருக்கும் மெலனினைப் பொருத்து அமைகிறது. இந்த மெலனின் அளவை 16 மரபணுக்கள் தீர்மானிக்கின்றன.
இந்தோனேசியாவில் உள்ள பட்டன் பழங்குடி மக்களில் பலரும் வார்டன்பர்க் சிண்ட்ரோம் (Waardenburg syndrome) என்ற மரபணு பிறழ்வால் பாதிக்கப்பட்டிருப்பதனால் நீல நிற கண்களைக் கொண்டிருக்கின்றனர்.
வார்டன்பர்க் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளவர்கள் பிறவி காது கேளாமை மற்றும் நிறமி கோளாறுகள் ஏற்படலாம். இதன் விளைவாக பிரகாசமான நீல கண்கள், வெள்ளி நெற்றி, தோலில் வெள்ளை திட்டுகள் ஏற்படும்.
பட்டன் என்பது (Buton, Butung, Boeton, Button) இந்தோனேசியாவிலிருக்கும் தீவின் பெயர். இது மழைக்காடுகளால் நிறைந்துள்ளது. இங்குள்ள வன விலங்குகளுக்காக பெயர்பெற்றது. கூர்மையான கொம்பு உடைய அனோவா (anoa) எருமைகள் உலகிலேயே இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. அவற்றில் பட்டன் தீவும் ஒன்று.