செய்திகள் :

Israel - Gaza: `நேற்று வரை போர்... இன்று போர் நிறுத்தத்தை அறிவித்த நெதன்யாகு!' - என்ன நடந்தது?

post image

2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், 'போர் நிறுத்த ஒப்பந்தத்தின்' மூலம் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் நேற்று முன்தினம் அறிவித்தது. இருந்தாலும், பணைய கைதிகளை விடுவிப்பதில் இரண்டு நாடுகளுக்கும் இடையே இழுப்பறிகள் தொடர்ந்துக்கொண்டிருந்தன.

இதுக்குறித்து வெள்ளிக்கிழமை (இன்று) பாதுகாப்பு சபை கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார்.

இதுவரை நடந்த இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரில் பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலை சேர்ந்த சிலரை சிறைபிடித்து வைத்திருந்தனர். இஸ்ரேலும் பல பாலஸ்தீனர்களை சிறையில் அடைத்து வைத்திருந்தது.

என்ன நடந்தது?!

இவர்களை விடுவிப்பதில் தான் பெரிய சிக்கல் எழுந்து வந்தது. இதற்கு, தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நெதன்யாகு. இன்று அவர் கூட்டிய பாதுகாப்பு சபையில் பணைய கைதிகளை விடுவிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை நெதன்யாகு அறிவித்துள்ளார். இதனையடுத்து, பாலஸ்தீனமும் அவர்கள் வைத்திருக்கும் பணைய கைதிகளை விடுவிப்பார்கள்.

இது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. நேற்றுக்கூட, இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கிட்டதட்ட 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கடைசி நிமிட தாக்குதலுக்கு பின், இதை காரணம் காட்டி இஸ்ரேல் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க முயன்றது. இந்த நிலையில், 'இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வருமா?' என்ற எழுந்த சந்தேகத்திற்கு பதில் அளித்துள்ளார் நெதன்யாகு.

இந்தப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

Trump: ``சீனா அதிபருடன் போனில் பேசினேன்; நாங்கள் இருவரும் சேர்ந்து...'' -டிரம்ப் சொல்வதென்ன?

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நடந்துவருகிறது. அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப், முன்னர் பேசுகையில், சீன இறக்குமதி பொருள்களுக்கு கிட்டதட்ட 60 சதவிகித வரி விதிக்க... மேலும் பார்க்க

``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆட்சியர் விளக்கம்

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது. அதோடு பல சர்ச்சைகளும் எழுந்தது. ஜாதிய ரீதியாக தன்னை மாடுபிடிக்க அனுமதிக்கவில்லை எனவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பழுத்து, சீழ் கோத்த பருக்கள்... சோப்பும் க்ரீமும் பலன் தருமா?

Doctor Vikatan:என் மகளுக்கு 24 வயதாகிறது. அவளுக்கு இரண்டு கன்னங்களிலும் பருக்கள் இருக்கின்றன. அந்தப் பருக்களில் சீழ் கோத்துக் காணப்படுகின்றன. இந்த மாதிரியான Pus-filled pimples-க்கு என்னதான் தீர்வு? எந... மேலும் பார்க்க

பாம் சரவணன் கைதும் Bahujan Samaj Armstrong கொலை வழக்கின் தொடர்பும் | Decode | Vikatan

பாம் சரவணன் என்ற ரவுடியை காவல் துறை கைது செய்துள்ளது. Armstrong கொலைக்கும் இவரது கைதுக்கும் உள்ள தொடர்பும் பின்னணியும் குறித்து விளக்குகிறது இந்த வீடியோ மேலும் பார்க்க

Road Accident: ``தவறாக சாலை அமைப்பவர்களை கைது செய்ய வேண்டும்'' -நிதின் கட்கரி சொல்வதென்ன?

'குண்டு குழியுமான ரோடுகளை அமைப்பது 'பிணையில்லாத குற்றமாக' கொண்டு வர வேண்டும்' என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, "உ... மேலும் பார்க்க

US: ``விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுடன் திருநங்கைகள்.." - விமர்சனத்துக்குள்ளாகும் மசோதா!

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதை கட்டுப்படுத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குடியரசுக் கட்சி தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கடந... மேலும் பார்க்க