செய்திகள் :

Jayam Ravi:`டாடா' இயக்குநர், கதாநாயகியாக தமிழக டி.ஜி.பி-யின் மகள் - ஜெயம் ரவி படத்தின் அப்டேட்

post image
தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான வேலைகளில் களமிறங்கிவிட்டார் ஜெயம் ரவி.

இவர் நடிக்கவிருக்கும் இரண்டு திரைப்படங்களுக்கான பூஜை நேற்று போடப்பட்டிருக்கிறது. ஒன்று இவரின் 34-வது திரைப்படம், மற்றொன்று சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படம். ஜெயம் ரவி-யின் 34-வது திரைப்படத்தை இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார்.

`டாடா' திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக கவனம் பெற்றவர், தற்போது தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்குகிறார். படத்தில் ஜெயம் ரவியுடன் தமிழக டி.ஜி.பி ஷங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கவிருக்கிறார். நேற்று வெளியான பூஜை ஸ்டிஸ்ல் மூலம் இத்தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

JR 34

இதுமட்டுமல்ல, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பி. வாசுவின் மகன் ஷக்தி வாசு நடிக்கவிருக்கிறார். படத்தின் எழுத்துப்பணிகளில் இயக்குநர் ரத்ன குமாரும், எழுத்தாளர் பாக்கியம் சங்கரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Jayam Ravi movie updates

`ப்ரதர்' திரைப்படத்தைத் தொடர்ந்து இத்திரைப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். `டாடா' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே. பாபு மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கூடிய விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தாண்டி சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கிற சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் ஜெயம் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி இசையமைக்கிறார். இது ஜி.வி-யின் 100-வது திரைப்படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Good Bad Ugly: `அஜித் சாரின் அன்பும் பண்பும் அங்கேயே நீடித்துவிடுகிறது!' -`கே.ஜி.எஃப்' அவினாஷ்

`குட் பேட் அக்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.அஜித் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவு பெற்றிருக்கிறது. அஜித் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்... மேலும் பார்க்க

"மெய்யழகன் மலையாளத்துல வந்திருந்தா இதுதான் சினிமான்னு கொண்டாடியிருப்பாங்க" - இந்துமதி பேட்டி

‘மெய்யழகன்’ படத்தில் `அத்தான்... அத்தான்'... என அன்புத்தொல்லை கொடுக்கும் கார்த்தி கதாப்பாத்திரத்துக்கு ஈக்குவலாக 'மச்சான்... மச்சான்' என ஈர்க்கவைக்கும் 'மெய்யழகி'தான் அரவிந்த்சாமியின் முறைப்பெண்ணாக வர... மேலும் பார்க்க

Suriya 45: `12 வருட இடைவெளிக்குப் பிறகு' - சூர்யா படத்தில் இணைந்த தேசிய விருது நடிகர்

சூர்யாவின் 45-வது படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது.ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். த்ரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கி... மேலும் பார்க்க

What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்

இந்த டிசம்பர் இரண்டாவது வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி இருக்கும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் குறித்து பார்க்கலாம்.தியேட்டர் ரிலீஸ்Miss you: (தமிழ்)என். ராஜசேகர் இயக்கத்தில் சித... மேலும் பார்க்க

Good Bad Ugly: `என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது!' - அஜித் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன்

அஜித் தற்போது `விடாமுயற்சி', `குட் பேட் அக்லி' என இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கிற `விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக... மேலும் பார்க்க

SK 25: ஜி.வி பிரகாஷின் 100வது படம்; எஸ்.கேவுக்கு 25; 'பிரமாண்டமாக தயாரிப்போம்' -படக்குழு சொன்ன தகவல்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இதையடுத்து இவர் சூர்யாவுடன் இணைந்து 'புறநானூறு' திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்... மேலும் பார்க்க