செய்திகள் :

Jharkhand: ஒரே ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் தனித்துவமான கிராமம் பற்றி தெரியுமா?

post image

ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் அமைந்துள்ள செங்ரே என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அதாவது, 40 குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு ஒரே குடும்பத்தினர் மட்டுமே அந்தக் கிராமத்தில் வசிக்கிறார்கள்.

மற்றவர்கள் காலப்போக்கில் நவீன வசதிகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் இல்லாததால் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

ஆனால் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இங்கே தங்கி வாழ்ந்து வருகின்றனர்.

Village life Rep image

இதுகுறித்து அந்தக் கிராமத்தில் வசிக்கும் சுதேஷ் கூறுகையில்:
“நாங்கள் இங்கு ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்கிறோம். மாடு, ஆடுகளை மேய்த்து எங்களது அன்றாட வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறோம். பால் மற்றும் ஆடுகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தையும், சிறு விவசாயம் செய்வதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தையும் வைத்து எங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

செங்ரே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் வசித்து வந்தாலும், அவர்களுக்கு அரசாங்கத்தின் நல உதவி திட்டங்கள் கிடைக்கின்றன. மக்கள் தொகை அளவைப் பொருட்படுத்தாமல், அதிகாரப்பூர்வமாக இது ஒரு கிராமமாகும் என்பதால், அவர்களுக்கும் அரசாங்கத் திட்டங்கள் கிடைப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

ஹில்டன் காத்மாண்டு: தீக்கிரையான ரூ.800 கோடி கனவு; நேபாளத்தின் உயரமான ஹோட்டல் பற்றி தெரியுமா?

நேபாளம் நாட்டில் இளைஞர்கள் கலவரத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அரசியல்வாதிகள் தாக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமரின் மனை... மேலும் பார்க்க

உலகின் மிகப்பெரிய அரண்மனை: 500 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நகரத்தில் இருக்கும் பேலஸ் பற்றி தெரியுமா?

சீனாவின் புகழ் பெற்ற அரண்மனைஅரண்மனை என்றாலே அதன் பிரமாண்ட கட்டிட அமைப்பும், அதன் அழகான வெளி தோற்றங்களும் பலரையும் ஈர்க்கும். அதிலும், சீனாவின் பீஜிங் நகரத்தில் உள்ள "ஏகாதிபத்திய அரண்மனை" (Imperial Pal... மேலும் பார்க்க

FASTag Annual Pass: ரூ.3,000-க்கு கட்டணமில்லா பயணம்; விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Toll Pass

ரூ.3,000 கட்டி டோல் பாஸ் பெற்றால் போதும். ஓராண்டுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணமின்றி பயணம் செய்துகொள்ளலாம் என்கிற நடைமுறை கடந்த 15-ம் தேதி முதல் வந்துள்ளது. அந்தப் பாஸ் பெறுவது எப்படி என்பதைத் தெரி... மேலும் பார்க்க

England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை விற்பனை?

இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸில் உள்ள ஒரு ஆடம்பரமான கடலோர மாளிகையை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கிட்டத்தட்ட 3 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 35.5 கோடி) மதிப்புள்ள இந்த ஆடம்பர சொகுசு வீடு வெற... மேலும் பார்க்க

சென்னையில் இருந்து செல்லக்கூடிய 6 டூரிஸ்ட் ஸ்பாட்'ஸ் - பட்ஜெட் Trip செல்ல ரெடியா?

மூன்று நாள் தொடர் விடுமுறை; இதில் செலவுகள் அதிகம் இன்றி சென்னையில் இருந்து சுற்றுலா செல்ல விரும்புவோருக்கான பதிவுதான் இது. அடுத்தடுத்து விடுமுறைகள் வருவதால் சுற்றுலா செல்ல திட்டமிட்டுக்கொண்டிருப்பார்க... மேலும் பார்க்க

"செலவை விட அனுபவமே முக்கியம்" – குறைந்த செலவில் ஐரோப்பாவைச் சுற்றிய இந்தியப் பெண்; எப்படி தெரியுமா?

பொதுவாக ஐரோப்பா பயணம் என்றாலே அதிக செலவான, எளிதில் செல்ல முடியாத பயணமாக இருக்கும். ஆனால், இந்தியாவைச் சேர்ந்த கனக் அகர்வால் என்ற ஐஐடி பட்டதாரி, ஒரு ஐபோனின் விலையை விட குறைவான செலவில் நான்கு ஐரோப்பிய ந... மேலும் பார்க்க