செய்திகள் :

Karun Nair: "எனக்கு சிறப்பான விஷயங்கள் கிடைத்திருக்க வேண்டும்" - ரஞ்சியில் 174* விளாசிய கருண்!

post image

இந்தியாவின் முதல் தர கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வருபவர் கருண் நாயர். இரண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் 1553 ரன்கள் சேர்த்து கலக்கினார். இதனை தொடர்ந்து இந்திய தேர்வுக் குழு அவரை இங்கிலாந்து தொடரில் இணைத்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்த தொடர்களில் அவர் சேர்க்கப்படவில்லை.

கருண் நாயர்

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 8 இன்னிங்ஸ் விளையாடிய கருண் நாயர் 205 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இது தேர்வுக்குழுவின் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யவில்லை. அவரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சேர்க்காதது குறித்து கேட்கப்பட்டபோது, "அவரிடமிருந்து நாங்கள் அதிகம் எதிர்பார்த்தோம்" எனப் பதிலளித்தார் அஜித் அகர்கார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 26) நடந்த கோவா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் கருண் நாயர் கர்நாடகா அணிக்காக 174* ரன்கள் அடித்து மீண்டும் தனது திறனை நிரூபித்துள்ளார்.

கவுதம் கம்பீர், அஜித் அகர்கர்

"நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே என் விருப்பம்" - Karun Nair

பின்னர் பேசிய அவர், இந்திய தேர்வுக்குழுவின் முடிவு தனக்கு ஏமாற்றமளித்ததாகப் பேசினார். "என்னுடைய கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு ஒரு தொடரை விட சிறப்பான விஷயங்கள் கிடைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்... தற்போது சிறப்பாக விளையாடி நிறைய ரன்கள் அடித்து மக்களின் கருத்துக்களில் இடம்பெற வேண்டும்." என்றார்.

தொழில்முறை கிரிக்கெட்டில் அவரது அடுத்த இலக்கு பற்றி கேட்கப்பட்டபோது, "அடுத்த இலக்கா... உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே என் விருப்பம். அதைச் செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து முயற்சித்து வெற்றிகளைப் பெற வேண்டும்." என்றார்.

Gautam Gambhir: இந்திய அணியின் மோசமான கோச்? கம்பீர் மீது ரசிகர்கள் அதிருப்தி!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவிய நிலையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக இணையத... மேலும் பார்க்க

IND v SA: 124 ரன்கள் கூட அடிக்க முடியாமல் படுதோல்வி; 15 ஆண்டுளுக்குப் பின் இந்தியாவில் தெ.ஆ வெற்றி

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியா வந்துள்ளது.இதில் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைத... மேலும் பார்க்க

ரஸல், பதிரனா, மேக்ஸ்வெல்; ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்கள் - முழு விவரம்

CSK Released PlayersCSK Released Players for IPL 2026RR Released Players for IPL 2026KKR Released Players for IPL 2026MI Released Players for IPL 2026GT Released Players for IPL 2026SRH Released Playe... மேலும் பார்க்க

``ஜடேஜாதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர விரும்பினார்'' - RR உரிமையாளர் மனேஜ் படேல் பேட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சாம் கரணை கொடுத்துள்... மேலும் பார்க்க

``நான் பேட்டிங் செய்தாலே அம்மா ஹாப்பி ஆகிடுவாங்க; ஆனால் அப்பா" - மனம் திறக்கும் சூர்யவன்ஷி

இந்திய அணிக்குள் என்னை எப்போது சேர்க்கப்போகிறீர்கள் என்கிற வகையில் நாளுக்கு நாள் தனது அதிரடி ஆட்டத்தை கூட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.13 வயதில் 19 வயத்துக்குட்பட்டோர் இளையோர் ட... மேலும் பார்க்க

IPL: CSK `டு' RCB; வீரர்கள் பட்டியலை வெளியிட்ட அணிகள்; மீத இருப்புத்தொகை எவ்வளவு | முழு பட்டியல்

2026 ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது.அதற்கு முன் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும், விடுவிக்கும் மற்றும் ட்ரேட் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பதற்கான இறு... மேலும் பார்க்க