செய்திகள் :

Kasthuri: "கஸ்தூரி என்ன தீவிரவாதியா?" - தமிழிசை சௌந்தரராஜன் சொல்வதென்ன?

post image
கஸ்தூரியை ஒரு தீவிரவாதி போன்று காவல்துறையினர் நடத்துவது சரியானது அல்ல எனப் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்களைத் தவறாகப் பேசியது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. பலரும் கஸ்தூரிக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். அவர்மீது சென்னை, மதுரை போன்ற இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், கஸ்தூரி தலைமறைவானார். இதனையடுத்து, நேற்று (நவம்பர் 17) அவர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

நடிகை கஸ்தூரி

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது தமிழிசை சௌந்தரராஜனிடம் கஸ்தூரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், "நடிகை கஸ்தூரி தவறான கருத்துக்களைத் தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்டார். ஆனாலும் ஒரு தீவிரவாதி போன்று அவரைக் காவல்துறையினர் நடத்துவது சரியானது அல்ல.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை செய்யப்பட்டுப் பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், கொலையாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. வேங்கைவயலில் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மனிதக் கழிவைக் கலந்தவர்களை இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. கொடும் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், கஸ்தூரியைத் தீவிரவாதி போலக் கைது செய்துள்ளது. காவல்துறை பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள்.

தமிழிசை சௌந்தரராஜன்

கருத்து பகிரும்போதுகூட சிலரின் கருத்துகளுக்குத் தீவிரமாக நடவடிக்கை எடுக்கிறார்கள். சிலரின் கருத்துக்களைக் கண்டுகொள்வதே இல்லை. மருத்துவர் காந்தராஜ் நடிகைகள் குறித்து தவறாகப் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை இல்லை. ஆதலால் இவர்கள் பாரபட்சமாகத்தான் நடந்துகொள்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

`கூட்டத்துக்கு வந்தால் இலவச நாற்காலி' வித்தியாசமாக ஆள் சேர்த்த அதிமுக நிர்வாகி-வைரலாகும் வீடியோ

கொள்கைக்காக கூட்டம் சேர்ந்த காலம்போய் தற்போது இலவசத்துக்கும், பணத்துக்கும் பரிசுப் பொருள்களுக்கும் கூட்டம் சேரும் நிலை வந்துவிட்டது. இதை பல அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பார்த்ததுண்டு. அரசியல் கட்சி... மேலும் பார்க்க

'மயூரா ஜெயக்குமார் vs கோவை செல்வன்' - விமான நிலையத்தில் மோதிய காங்கிரஸ் கோஷ்டிகள்; நடந்தது என்ன?

கோவை காங்கிரஸ் கட்சியில் சமீபகாலமாக உள்கட்சி பிரச்னை உச்சத்தில் உள்ளது. தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தாலும், கோவை அரசியலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.மயூர... மேலும் பார்க்க

RSS கோட்டையில் ரோடு ஷோ: கறுப்புக்கொடி காட்டிய பாஜக-வினருக்கு பிரியங்கா காந்தி பதிலடி

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரண்டு நாள்கள் தீவிரமாக பிரசாரம் செய்தார். அவர் ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகம் இருக்கும் நாக்பூரில் ரோடு ஷோ நடத்தினார். மக்கள் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `மீண்டும் ஒரு வாய்ப்பு..!’ - 50 ஆண்டு செல்வாக்கை மீட்பாரா அசோக் சவான்?

நடைபெறவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பல தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கிறது.இத்தேர்தலில் பல அரசியல் வாரிசுகள் களம் காண்கின்றனர். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு ... மேலும் பார்க்க

Seeman: ``திமுக-வினருக்கு எந்த ரெய்டும் வராது; காரணம் கப்பம்..!" - சீமான் காட்டம்

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 - வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் திருஉருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி... மேலும் பார்க்க