செய்திகள் :

Kubera: "குபேரா படத்தில் ஹீரோ நான்தான்!" - சக்சஸ் மீட்டில் நாகர்ஜூனா

post image

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது 'குபேரா'. இந்தப் படத்தை டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.

Kubera
Kubera

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஹைதராபாத்தில் இன்று இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாகார்ஜுனா பேசுகையில், "சேகர் கம்முலாவுக்கு தொடர்ந்து வெற்றிகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அவருடைய அனைத்துப் படங்களின் வெளியீட்டிற்குப் பிறகும் இதே இடத்தில் வெற்றி விழாக்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

நேற்று ஒருவர் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்துக் கொண்டிருப்பதாகப் புகைப்படங்களைக் காட்டினார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

சேகரும் நானும் இணைந்து படம் பண்ண வேண்டும் என நினைத்திருக்கிறோம். நாக சைதன்யாவே சேகருடன் இணைந்து படம் நடித்துவிட்டார்.

Kubera Success Meet
Kubera Success Meet

நாங்கள் இருவரும் படம் பண்ண வேண்டும் என சந்திக்கும்போதெல்லாம், 'ஒரு ஸ்டைலிஷ் படம் பண்ணலாம்' என சேகர் கம்முலா சொல்வார். இப்போது, அற்புதமான கதாபாத்திரம் ஒன்றை எனக்குக் கொடுத்திருக்கிறார்.

'மிஸ்ஸம்மா', 'குண்டம்மா' படங்களைப் பார்த்தால், அப்படத்தின் ஹீரோவைத் தாண்டி இயக்குநர்கள்தான் நம் நினைவில் இருப்பார்கள். அதுபோல, 'குபேரா'வும் சேகர் கம்முலாவின் திரைப்படம்.

என்னைப் பற்றி யோசித்ததற்கு நன்றி, சேகர் சார். இந்தப் படத்தில் ஹீரோ நான்தான். 'குபேரா' படத்தின் கதை என்னுடைய 'தீபக்' கதாபாத்திரத்தைச் சுற்றியே நடக்கும்," எனப் பேசியிருக்கிறார்.

HIT 3 கதை விவகாரம்: நானி மற்றும் படக்குழுவினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ஹிட் 3 திரைப்பட கதைத் திருட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் நானி மற்றும் திரைப்பட குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹிட் 3 திரைப்படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டது என திரைக்கதை ஆச... மேலும் பார்க்க

Kuberaa: "அதுதான் அவருடன் பணியாற்ற விரும்பியதற்கான காரணம்" - இயக்குநர் சேகர் குறித்து ராஷ்மிகா

தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படம் நேற்று (ஜூன்21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில... மேலும் பார்க்க

Kuberaa: 'குபேரா' படத்தின் BTS புகைப்படங்களைப் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா | Photo Album

Kuberaa Review: நடிப்பை அள்ளி வழங்கும் `குபேரன்' தனுஷ்; ஆழமான எமோஷன்ஸ்; சுவாரஸ்யமான படமாக மாறுகிறதா?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்... மேலும் பார்க்க

Kuberaa: "தன் படத்தின் பெண் கதாபாத்திரங்களை சேகர் சக்திவாய்ந்ததாக எழுதுகிறார்" - சாய் பல்லவி

தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படம் இன்று (ஜூன்20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில்... மேலும் பார்க்க

Kuberaa Review: நடிப்பை அள்ளி வழங்கும் `குபேரன்' தனுஷ்; ஆழமான எமோஷன்ஸ்; சுவாரஸ்யமான படமாக மாறுகிறதா?

வங்கக் கடலில் பெரிய அளவிலான எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் முழு உரிமையையும், மத்திய அமைச்சரிடம் லஞ்சம் கொடுத்துப் பெறுகிறார் கார்ப்பரேட் முதலாளியான நீரஜ் (ஜிம் சர்ப்). அதற்கான லஞ்சப் பணமான ... மேலும் பார்க்க

"தெலுங்கில் நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கிறது" - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி

தெலங்கானா அரசின் திரைப்பட விருது விழாவில் 4ம் ஆண்டாக விருதை வென்றிருக்கிறார் துல்கர் சல்மான்.தெலுங்கில் 'மகாநாட்டி', 'சீதா ராமம்' மற்றும் 'லக்கி பாஸ்கர்' என துல்கர் சமீபமாகக் கதைத்தேர்வில் மிகுந்த கவன... மேலும் பார்க்க