அகமதாபாத் விபத்து எதிரொலி; விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு புதிய க...
Kubera: "பணக்காரருக்கும், பிச்சைக்காரருக்கும் இடையே.." - குபேரா கதை குறித்து இயக்குநர் சேகர் கம்முலா
தனுஷின் நடிப்பில் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்துப் பேசியிருக்கும் இதன் இயக்குநர் சேகர் கம்முலா, "பணக்காரருக்கும், பிச்சைக்காரருக்கும் இடையே நடக்கும் கதை இது. சமூக ஏற்றத் தாழ்வுகளைப் பேசும் படம் இது.
சமூகத்தில் நம்மைச் சுற்றி நடக்கும், நாம் கவனிக்காத கதையை எடுத்திருக்கிறோம், நிச்சயம் இப்படம் வித்தியாசமான கதைக்களமாக இருக்கும். தனுஷ் சார் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். படம் பார்த்தால் உங்களுக்கே அது தெரியும். படப்பிடிப்பு முடியும்வரை தனது கதாபாத்திரத்திலேயே மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தார்" என்று பேசியிருக்கிறார்.

தனுஷ் சார் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். படம் பார்த்தால் உங்களுக்கே அது தெரியும். படப்பிடிப்பு முடியும்வரை தனது கதாபாத்திரத்திலேயே மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தார்" என்று பேசியிருக்கிறார்.
இப்படத்தில் சில காட்சிகளை தணிக்கைக் குழு நீக்கியிருக்கிறது. அதன்படி குபேரன் படத்தின் 19 காட்சிகள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட காட்சிகளின் மொத்த நீளம் 13 நிமிடங்கள் 41 விநாடிகள்.
நீக்கப்பட்ட காட்சிகளில் தனுஷ் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்த காட்சிகள்தான் அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தனுஷ், ராஷ்மிகா, நாகர்ஜுனா மூவரும் ஒரு டாக்ஸியில் பயணிப்பது போன்ற நீண்ட காட்சியும், ஜிம் சர்ப் நடித்த சில காட்சிகளும் நீக்கப்பட்டிருக்கின்றன. இப்படத்தின் OTT உரிமைகளை அமேசான் பிரைம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...