செய்திகள் :

Johnny Depp: ஜாக் ஸ்பேரோவின் திடீர் என்ட்ரி; மகிழ்ச்சியில் ஆழ்ந்த குழந்தைகள்.. நெகிழவைத்த ஜானி டெப்

post image

சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகர் ஜானி டெப், ஸ்பெயினில் உள்ள நினோ ஜீசஸ் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று புற்றுநோய் மற்றும் பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தற்போது அவர் நடித்துவரும் டே ட்ரின்கர் படத்தின் படபிடிப்புக்காக ஸ்பெயினில் தங்கியிருக்கும் அவர், அவரது பிரபலமான கதாப்பாத்திரமான கேப்டன் ஜாக் ஸ்பாரோ போல உடை அணிந்து சென்றுள்ளார்.

62 வயதாகும் அவர் குழந்தைகளுடன் சிரித்து மகிழும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஜானி டெப், கேப்டன் ஜாக் ஸ்பேரோவாக மாறி, மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகளை மகிழ்விப்பது இதுமுதன்முறை அல்ல. வான்கூவர், பாரிஸ், லண்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் முதல் அமெரிக்காவின் பல நகரங்கள் வரை உலகம் முழுவதும் பலமுறை இதைச் செய்துள்ளார்.

"சில நேரங்களில் நான் குழந்தைகள் மருத்துவமனை போன்ற இடங்களுக்குச் செல்வேன். பல்வேறு வார்டுகளில் குழந்தைகளை ஆச்சரியப்படுத்துவேன். அது இரண்டு, மூன்று மணிநேரம் நீடிக்கும்... மிகவும் வேடிக்கையானதாக இருக்கும். அதற்காகவே நான் ஜாக் ஸ்பேரோவாக பயணிக்கிறேன்" என 2013ம் ஆண்டு அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார் ஜானி டெப்.

Johnny Depp
Johnny Depp

2003ம் ஆண்டு முதல் பைரட் ஆஃப் தி கரீபியன் படத்தில் நடித்தார் ஜானி டெப். அதன்பிறகு 2017 வரை 5 படங்கள் அதே கதையுலகில் வெளியாகி சிறப்பான பென்டாலஜியாக உருவானது.

பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் 6-ல் Johnny Depp?

ஜானி டெப் பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் சீரிஸுக்கு திரும்ப வேண்டுமென்பது உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது.

ஆனால் ஆம்பர் ஹெட் உடனான நீதிமன்ற போராட்டத்தின்போது டிஸ்னி ஜானி டெப்-ஐ தங்கள் தயாரிப்புகளிலிருந்து நீக்கியதால் அவர் மீண்டும் டிஸ்னியுடன் இணைவாரா என்பது பெரும் கேள்விக்குறியாகதான் இருக்கிறது.

சமீபத்தில் அடுத்த பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தை தயாரிக்க இரண்டு கதைகளை உருவாக்கி வருவதாக தயாரிப்பாளர் ஜெர்ரி ப்ரூக்ஹைமெர் தெரிவித்துள்ளார். இதனால் ஜானி டெப் திரும்புவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

The Holocaust Movies : யூத படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் - ஓர் அறிமுகம்!

1933ம் ஆண்டு வாக்கில், ஹிட்லரின் நாஜி ஆட்சியின் கொடூரங்கள் ஆரம்பமாகிறது. ஹிட்லர் ஜெர்மனியின் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு, யூதர்களுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்துகிறார். இரண... மேலும் பார்க்க

Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விருது வென்று சாதனை!

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஆபத்தான சாகச காட்சிகள் நடிப்பது புதிதானதல்ல. அதற்கு சாட்சியாக கின்னஸ் உலக சாதனை கௌரவம் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான Mission: Impossible – The Final Reckoning திரைப... மேலும் பார்க்க

Marvel - DC : 20 ஆண்டுகளுக்குப் பிறகு மார்வெல் - டி.சி-யின் க்ராஸ் ஓவர் - இது காமிக்ஸ் உலக வார்!

சூப்பர்ஹீரோ உலகில் முன்னணி நிறுவனங்களாகவும் பல தசாப்தங்களாக போட்டி நிறுவனங்களாகவும் வலம் வருபவைதான் மார்வெல் ஸ்டுடியோஸ் (MARVEL STUDIOS) மற்றும் டிசி ஸ்டுடியோஸ்(DC STUDIOS) . சூப்பர்ஹீரோ காமிக் புத்தக... மேலும் பார்க்க

Karate Kid: Legends Review: `உங்களுக்கு வயசாகல!' ஜாக்கி சானின் குறும்பும், பென் வாங்கின் அதிரடியும்!

குங்ஃபூ வீரரான லி ஃபாங் (பென் வாங்), தனது தாயுடன் பீஜிங்கிலிருந்து நியூயார்க்குக்கு குடியேறுகிறான். அண்ணனின் மரணத்தால் மன உளைச்சலில் இருக்கும் லி, குங்ஃபூவில் தேர்ந்தவனாக இருந்தாலும் மீண்டும் சண்டையிட... மேலும் பார்க்க

Lilo & Stitch Review: மழலை அன்புடன் சேரும் ஏலியன்! கோடைக் கால எண்டர்டெயினராக குழந்தைகளை ஈர்க்கிறதா?

தாய் - தந்தை அரவணைப்பின்றி லிலோவும் (மையா கெலோஹா) அவருடைய சகோதரி நானியும் (சிட்னி எலிசபெத்) தனித்து வாழ்ந்து வருகின்றனர்.வேற்று கிரகத்தில் வாழும் ஏலியன் ஆராய்ச்சியாளர் ஜும்பா, '626' என்ற ஏலியனை உருவாக... மேலும் பார்க்க