செய்திகள் :

Kudumbasthan: ``லைம் லைட்டை வேஸ்ட் பண்ணிட்டன்னு பேசுனாங்க; ஆனா...'' - இசையமைப்பாளர் வைசாக் பேட்டி

post image
இணையவெளியில் சுயாதீன இசைகலைஞர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்

அப்படி நாம் நண்பர்களிடையே யதார்த்தமாக பேசிக் கொள்ளும் விஷயங்களைப் பாடல் வரிகளாக விரித்து மெட்டு போட்டு புதிய வடிவிலான வைப் ஒன்றைக் கொடுத்து குறுகிய காலத்திலேயே மக்களுக்கு ஃபேவரிட்டானவர்தான் வைசாக். சுயாதீன பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்ததும் சட்டென இந்த இசைக் கலைஞருக்கு அஜித் படத்தில் பாடல் எழுதும் பெரிய வாய்ப்பு கிடைத்தது. இப்படியான லைம் லைட் கிடைத்ததும் அதை தக்கவைத்துக் கொள்ளதான் பலரும் முற்படுவார்கள். ஆனால், இவரோ பொறுமையாக தனது கரியருக்கான அடுத்தக் கட்ட வேலைகளை கவனித்து இப்போது `குடும்பஸ்தன்' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.

இவரை சந்தித்துப் பேசுகையில், ``முதல் படத்துக்கு ரொம்ப பாசிடிவ்வான மக்களின் வரவேற்பு கிடைக்குது. இந்தப் படத்துக்கு இசையமைச்சதை நினைச்சு நான் பெருமையாக உணர்றேன்." என்றதும் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டோம்.

இந்தப் படத்தோட தியேட்டர் விசிட் போயிருந்தப்போ மணிகண்டன் உங்களுடைய கையைத் தூக்கினாரு. கையை தூக்கினதும் பார்வையாளர்களுக்கு உங்களுக்கு விசில் அடிச்சாங்க. அப்போ எப்படியான உணர்வு எழுந்தது?

`சில்லுக்கருப்பட்டி' படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்தப் படத்தோட ப்ரிவியூ காட்சியில அந்தப் படத்தைப் பார்த்துட்டு மணி அண்ணாகிட்ட `செமையா நடிக்கிறீங்க! பெரிய ஆளாக வருவீங்க'னு பேசியிருந்தேன். கட் பண்ணா இப்போ மணி அண்ணா என்னோட கையைத் தூக்குறாரு. அதுக்கு மக்கள் வரவேற்புக் கொடுக்கிறாங்க. இது `எங்கு தொடங்கும், எங்கு முடியும், ஆற்றின் பயணம்!' மொமன்ட்தான். ரொம்பவே நெகிழ்வான தருணம்தான் அது.

`துணிவு' திரைப்படத்துல பாடல் எழுதினதுக்குப் பிறகு உங்களுக்கு பெரிய லைம் லைட் கிடைச்சது. உடனடியாக ஒரு இடைவெளி எடுத்து படத்துக்காக இசையமைக்கத் தொடங்கிட்டீங்க! அந்த இடைவெளில நம்ம லைம்லைட் போயிடும், மக்கள் மறந்திடுவாங்கனு பயம் இருந்ததா உங்களுக்கு?

என்னை சுத்தி நிறைய பேர் அந்த விஷயத்தைப் பற்றி பேசுனாங்க. `லைம் லைட்டை வேஸ்ட் பண்ணிட்ட'னு சொன்னாங்க. ஆனால், `குடும்பஸ்தன்' படம் என் கரியருக்கு என்ன விஷயம் பண்ணப்போகுதுன்னு அவங்களுக்குத் தெரியாது. கதையாகவே இந்தப் படம் அவ்வளவு வலுவாக இருந்தது. படிக்கும்போதே எனக்கு க்ளைமேக்ஸ் காட்சி ரொம்ப பிடிச்சிருந்தது. அவ்வளவு நம்பிக்கையோட நான் இருந்தேன். இந்தப் படத்துக்காக ஒரு வருஷம் இல்ல. இன்னொரு வருஷம் காத்திருந்தாலும் நான் வருதப்பட்டிருக்கமாட்டேன். நான் கொடுத்த விஷயத்தைவிட 100 மடங்கு இந்த திரைப்படம் அதிகமாகவே கொடுக்கும்னு தெரியும்.

சுயாதீன இசை - திரைப்பட இசை, இவை இரண்டுக்கும் எதாவது வேறுபாடு உணர்ந்தீங்களா?

சுயாதீன இசையில பாடல்கள் பண்ணுவோம். ஆனால், படத்துல ஸ்கோர் மாதிரியான நிறைய விஷயங்கள் இருக்கு. சுயாதீன இசையில பாடலுக்கேத்த மாதிரியான காட்சிகள் நகரும். ஆனால், படங்கள்ல அப்படி இல்லை. பலரும், முதல் படம் உனக்கு காமெடி திரைப்படமாக அமைஞ்சதுன்னா துன்பம்னு சொன்னாங்க. `மக்கள் சிரிப்பாங்க. ஆனால், நீ கண்டிப்பாக அழுவ'னு சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரிலாம் எதுவும் கிடையாது. படத்துக்கான வேலைகள் புதியதாக இருந்தாலும் என்னை எந்த இடத்திலும் அந்த வேலைகள் அயர்ச்சியடைய வைக்கல.

குடும்பஸ்தன் படத்தில்...

இந்தப் படத்துல ஒரு பக்கம் மணிகண்டனோட கதாபாத்திரம் யதார்தத்திற்கு ரொம்பவே நெருக்கமாக இருக்கும். அதற்கு நேரெதிராக குரு சோமசுந்தரமோட கதாபாத்திரம் காமிக் வடிவத்துல இருக்கும். கதாபாத்திரங்கள் இப்படியிருக்க, படத்துக்கு எப்படியான மியூசிக் டிரீட்மென்ட் கொடுக்கணும்னு திட்டமிட்டீங்க?

ஒரு அனிமேஷன் ஸ்டைல்ல கொடுக்கலாம்னுதான் நான் பிளான் பண்ணினேன். இதுவரைக்கும் பார்த்தப் படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டணும்னா ஒரு அனிமேஷன் வடிவில இந்தப் படத்துக்கு இசையமைப்போம்னு திட்டமிட்டேன். நவீன் கதாபாத்திரம் அப்படியே நிதர்சன வடிவத்துல இருக்கும். அதற்கான இசைகளுக்கு என்னென்ன கருவிகள் தேவைப்படுமோ, அதை பயன்படுத்தி நவீனோட காட்சிகளுக்குப் பயன்படுத்தினேன். மணி அண்ணா படம் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாரு.இப்போ படம் ரிலீஸுக்குப் பிறகு ஒரு நிகழ்வுக்குப் போகும்போது நான் அவர்கிட்ட ஐந்து வருடத்துக்கு முன்னாடி `சில்லுக்கருப்பட்டி' படம் பார்த்துட்டு போட்டிருந்த பதிவைக் காட்டினேன். அந்த பதிவுல `பேரன்பும் தீராக்காதலுமே சில்லுக்கருப்பட்டி'னு குறிப்பிட்டிருந்தேன். அந்தப் படம் எனக்கு எப்படியான உணர்வைக் கொடுத்துனு சொல்லி பேசினோம். அதுலாம் ஒரு எமோஷனல் தருணம்தான். பிறகு, `ஐயா நீங்க பெருசா வருவீங்க'னு பாராட்டினாரு!

படத்துல ஜி.வி. பிரகாஷ், ஷான் ரோல்டன்னு முன்னணி இசையமைப்பாளர்கள் பாடியிருக்காங்களே...

எனக்கு காலையில எழுந்ததும் மென்மையான ஜி.வி சார் மெலடி கேட்கிறதுக்குப் பிடிக்கும். அவர் இந்தப் படத்தோட பாடலை பாடணும்னு முடிவு பண்ணி டீம்ல சொன்னேன். அவங்களும் என்னோட எண்ணங்களுக்கு மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புதல் கொடுத்தாங்க. அதுக்கெல்லாம் முக்கிய காரணம் ஏ.ஐதான். ஆமா....ஜி.வி சாருக்கு டேட்ஸ் இருக்கு. நான் பட்டுனு ரிஸ்க் எடுத்திட முடியாது. அதுனால ஏ.ஐ வச்சு முதல்ல பண்ணிக் காமிச்சேன். அதுல அவங்களுக்கு எல்லா பாடல்களுமே பிடிச்சிருந்தது. ஜி.வி. சார் இதுக்கு முன்னால என்னுடைய சுயாதீன ஆல்பம் பாடல்களைக் கேட்டிருக்காரு. அவரை சுத்தி உள்ளவங்களும் அவருக்கு என்னுடைய பாடலை காமிச்சிருக்காங்க. அந்தப் பாடல்கள் தொடர்பாகவும் என்கிட்ட பேசினாரு. இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு... நான் மியூசிக் டைர்கட்ராக அறிமுகமாகுற படத்தோட முதல் ரெக்கார்டிங் ஜி.வி சாரோடதுதான். அப்புறம்...`ஜீரோ பேலன்ஸ் ஹீரோ' பாடலை ஷான் ரோல்டன் பாடினால் நல்லா இருக்கும்னு மணி அண்ணாதான் சொன்னாரு. எனக்கு அப்போ`காதல் அர ஒண்ணு விழுந்துச்சு' பாடலோட எனர்ஜியைத் திரும்பக் கொண்டுவரணும்னுதான் தோணுச்சு

`துணிவு' உங்களுக்கு என்னென்ன விஷயங்களைக் கொடுத்திருக்கு?

முக்கியமாக அந்த ப்ராஜெக்ட் எனக்குப் பொறுமையை சொல்லிக் கொடுத்திருக்கு. ரொம்ப நாட்களுக்குப் பிறகு, ` அஜித் சார் கூப்பிட்டு சந்திச்ச சில ஆட்கள்ல நீயும் ஒருத்தன்'னு நண்பர்கள் சொன்னாங்க. அந்த சந்திப்புக்குப் பிறகு நான் என்னுடைய சக இசைக்கலைஞர்களுக்கு எப்படியான மரியாதையைக் கொடுக்கணும்னு சொல்லிக் கொடுத்துச்சு. நிறைய விஷயங்கள் பேசுவாங்க. அதுக்கெல்லாம் செவி கொடுக்காமல் உனக்கு உண்மையாக இருக்கணும்'ங்கிற விஷயத்தை `துணிவு' படம்தான் எனக்குக் கத்துக் கொடுத்துச்சு.

கடந்த ஒரு வருஷத்துல அடுத்தடுத்து பல சுயாதீன இசைக்கலைஞர்கள் வளர்ந்துட்டாங்க, யாருடைய பாடல்களை அதிகமாக ரசிக்கிறீங்க?

பால் டப்பா, சாய் அபயங்கர், அசல் கோளார், கெளுத்தி, இந்தப் படத்துல பாடியிருக்கிற ஏ-கன்னு பலருக்கும் மக்கள் வரவேற்பைக் கொடுத்திருக்காங்க. என்னை வச்சு `இவன் வந்தான். ரெண்டு பாட்டு பண்ணினான். படம் பண்ணினான்.முடிஞ்சது அவ்வளவுதான்'அப்படிங்கிற கருத்து ஈஸியாக விழுந்திருக்கும். அது சுயாதீன இசைக்கலைஞர்களுக்கு ஒரு டேக்காககூட மாறியிருக்கும். ஆனால், அடுத்தடுத்து பால் டப்பா - ஆஃப்ரோவோட `காத்து மேல', அசலோட `பையா டேய்', சாய் அபயங்கரோட `ஆச கூட'னு பல பாடல்களால அடுத்தடுத்து லைம் லைட்டுல இருந்தாங்க. ரெண்டு சின்ன பசங்க ஒருத்தன் `நான் அசல் கோளார் ஃபேன்' ..ஒருத்தன் `நான் பால் டப்பா'னு சண்டைப் போடுறதை நான் நேர்ல பார்த்தேன். `தல - தளபதி' பேன் சண்டை முடிஞ்சு.... இப்போ இந்த மாதிரி சண்டை போடுறாங்க.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடினம்?

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அமெரிக்க சினிமாட்டோகிராப்பர் சொசைட்டி (ASC) என்ற உலகப் புகழ்பெற்ற சங்கத்தின் உறுப்பினராக இணைந்துள்ளார். இந்த நிகழ்வைத் தற்போது அவர் பணியாற்றிவரும் லவ... மேலும் பார்க்க

``சந்தானம் அதைச் சொன்னப்போ அழுதுட்டேன்"- நெகிழும் `லொள்ளு சபா' சாமிநாதன்

நடிகர் லொள்ளு சபா சாமிநாதன் மகள் ஐஸ்வர்யா திருமணம் கும்பகோணத்தில் நடந்து முடிந்திருக்கிறது. நடிகர்கள் வையாபுரி, காளி வெங்கட் உள்ளிட்ட சிலர் அதில் கலந்து கொண்டனர்.'சிம்பிளா முடிச்சிட்டீங்களே, சினிமா நண... மேலும் பார்க்க

Karathey Babu: "மாண்புமிகு மகா ஜனங்களே..." - BTS புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

``ஒவ்வொரு முறையும் அடிகளும், வலிகளும்தான்; பிரச்னை வந்துகிட்டே இருக்கு..'' -வருந்தும் சமுத்திரக்கனி

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'திரு.மாணிக்கம்'. இப்ப... மேலும் பார்க்க

Parasakthi: ``பழைய பெயர் வைப்பது தவறு; `பராசக்தி’ என்றால் கலைஞர்; அதற்கு மேல்..." – பார்த்திபன்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்தன்னுடைய படப்பிடிப்பு தொடர்பாக இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் நேற்று புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனைச் சந்தித்தார். அதன்பி... மேலும் பார்க்க