செய்திகள் :

LIK: 'தலைவர் 189', 'மிஷன் இம்பாசிபில்' படத்தில் யஷ் - கவனம் ஈர்க்கும் LIK டீசரின் கற்பனை காட்சிகள்!

post image

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் 'LIK' திரைப்படம் தீபாவளி வெளியீடாக இந்த ஆண்டு திரைக்கு வருகிறது.

படத்தின் பர்ஸ்ட் பஞ்ச் டீசரை இன்று படக்குழு வெளியிட்டிருக்கிறது. சயின்ஸ் பிக்ஷன் கலந்த காதல் திரைப்படமாக படத்தின் கதையை 2040-ல் நடப்பதாக அமைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

LIK - First Punch
LIK - First Punch

அதற்கென ஸ்பெஷலாக 'தலைவர் 189, ராஜீவ் காந்தி ஹை டெக் மருத்துவமனை' போன்ற கற்பனையான சில விஷயங்களை கவனித்து படத்தில் வைத்திருக்கிறார்.

அந்த விஷயங்களும் இப்போது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அப்படி இந்த டீசரில் அமைந்திருக்கும் முக்கியமான சில ஹைலைட் விஷயங்களை டீகோட் செய்து பார்ப்போமா...

அடையார் மெட்ரோ பாலத்திற்கு அருகில் சில பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதாக காட்டியிருக்கிறார்கள். அதில் 'மிஷன் இம்பாசிபிள்' படத்தின் 14-ம் பாகத்தில் நடிகர் யஷ் நடிப்பதாகவும், கலைஞர் மெட்டவெர்ஸ் யூனிட் செயல்பட்டு வருவதாகவும், ஐ.பி.எல் போட்டி 2040-லும் தொடர்ந்து நடப்பதாகவும் காண்பித்திருக்கிறார்கள்.

மழை பொழியும் நேரத்தில் பயன்படுத்துவதற்கான ஸ்மார்ட் குடை, நடைபாதையில் நடப்பதற்கு, சாட் செய்துகொண்டே நடப்பதற்கு, சைக்கிளிங் செல்வதற்கு என மூன்று பாதைகள் அமைத்திருப்பதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதற்கு அருகில் ரஜினியின் 189-வது படம் உருவாகுவதாக கற்பனையாக பதாகையையும் காட்டியிருக்கிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் 'ஹாலிவுட்' சைன் போல 2040-ல் 'கோலிவுட்' சைன் அமைந்திருப்பதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழக அரசின் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கென பிரத்யேகமாக மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு, மருத்துவமனை ஹை டெக் வசதிகள் கொண்டிருப்பதாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இதைத் தாண்டி, அனிருத்தின் 'எனக்கென யாரும் இல்லையே' என்ற சுயாதீன பாடலையும் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்பாடலை எழுதியது விக்னேஷ் சிவன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தைப் போல எதிர்காலத்தில் நிகழ்பவையாக தமிழில் கடைசி உலகப் போர், அடியே மாதிரியான சில திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அப்படியான திரைப்படங்களையும், இந்த டீஸரில் உங்களுக்குப் பிடித்த விஷயங்களையும் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Nivetha Pethuraj: காதலரை அறிமுகப்படுத்திய நிவேதா பெத்துராஜ்; யார் அவர்?

தனது காதலரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ்.அதன்பின் ‘டிக் டிக... மேலும் பார்க்க

தயாரிப்பு பக்கம் வரும் செளந்தர்யா ரஜினிகாந்த்; ஹீரோவாக அறிமுகமாகும் `டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர்!

`டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டை, டோலிவுட்டை, பாலிவுட்டை, மாலிவுட்டை என அனைத்துச் சினிமாக்களையும் தன்னுடைய பெயரை உச்சரிக்கச் செய்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். சசிகுமார், சிம்ரன் உ... மேலும் பார்க்க

KPY Bala: ``நான் ஹீரோவாக நடிக்கிறேன்னு 50 ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க!'' - நடிகர் பாலா

'காந்தி கண்ணாடி' படத்தின் மூலம் ஹீரோவாகிறார் KPY பாலா. நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல் எனப் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 'ரணம்' ப... மேலும் பார்க்க