`அரசுப் பள்ளிக்கு என்ன குறைச்சல்?' - அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த மாவட்ட நீதி...
Lokah: சூப்பர் ஹீரோயின் ஆக களமிறங்கும் கல்யாணி பிரியதர்ஷன் - வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்
இந்திய திரைப்படங்களில் பெரும்பாலும் சூப்பர் ஹீரோ கதைப் படங்கள் குறைவாகவே வெளியானாலும் அதில் எல்லாமே ஆண்கள் தான் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கின்றனர்.
பெண்கள் சூப்பர் ஹீரோ ஜானரில் பெரிதாக நடித்ததில்லை. முதல் முறையாக கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோ கதாபத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

'லோகா சாப்டர் 1; சந்திரா' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தை துல்கர் சல்மான் தயாரிக்கிறார். டோமினிக் அருண் இயக்கி இருக்கிறார். இப்படம் பல பாகங்களில் ஒரு சினிமாடிக் யூனிவர்ஸில் உருவாக இருக்கிறது.
பிரேமலு புகழ் நஸ்லேன், சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியார் இப்படத்தில் நடிக்கின்றனர்.
படக்குழு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டிருக்கின்றனர். சூப்பர் ஹீரோ ஆடையுடன் காட்சியளிக்கும் கல்யாணி பிரியதர்ஷனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.