செய்திகள் :

Lokesh Kanagaraj: `உங்களின் நுண்ணறிவும், கதை சொல்லல் பேரார்வமும்' - `கூலி' படத்தில் ஆமீர் கான்?

post image

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு 60-வது பிறந்தநாள் இன்று. இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இன்று பிறந்தநாள். அவர் இயக்கி வரும் `கூலி' திரைப்படத்தில் ரஜினி, நாகர்ஜூனா, சத்யராஜ், செளபின் சாஹிர், உபேந்திரா, ஷ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்து வருவதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இவர்களை தாண்டி நடிகர் ஆமீர் கானும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், சன் பிக்சர்ஸ் அது தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதனை தொடர்ந்து தற்போது அவருடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்திருக்கிறார். அவர் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் லோகேஷ், ``இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அமீர் கான் சார். நமக்கிடையே நிகழ்ந்த அந்த உரையாடலை எண்ணி மகிழ்கிறேன். உங்களுடைய நுண்ணறிவும், கதைசொல்லலில் உங்களுக்கு இருக்கும் பேரார்வமும் எனக்கு எப்போதும் ஊக்கமளித்திருக்கிறது. வரும் ஆண்டுகளில் திரையில் மேலும் மேஜிக்குகளை உருவாக்குவோம். இந்த ஸ்பெஷலான நாளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன் சார்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

CSK vs MI: ``அலப்பறை கிளப்புறோம்; சேப்பாக்கத்தில் பெர்ஃபாம் செய்வது என்னுடைய கனவு!'' - அனிருத்

சென்னை மற்றும் மும்பை அணிக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டி நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. ... மேலும் பார்க்க

`விவாகரத்து கோரி மனு தாக்கல்' - விசாரணைக்கு ஒரே காரில் வந்து சென்ற ஜி.வி பிரகாஷ் - சைந்தவி

பள்ளி தோழியான சைந்தவியை , கடந்த 2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவி... மேலும் பார்க்க

Vijay: ``விளம்பர மாடல் தி.மு.க. அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்?'' - சாடும் விஜய்

அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் ... மேலும் பார்க்க