செய்திகள் :

LSG vs DC: "அதிரடி வேண்டும் என்பதால் மில்லரை இறக்கினோம்; ஆனால்..." - தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

post image

ஐ.பி.எல் தொடரின் நேற்றை (ஏப்ரல் 23) போட்டியில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின.

இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி லக்னோ அணியை வீழ்த்தியது.

DC vs LSG - அக்சர் படேல், ரிஷப் பண்ட்
DC vs LSG - அக்சர் படேல், ரிஷப் பண்ட்

இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.  

“யார் இந்த (லக்னோவில் உள்ள ஏக்னா மைதானம்) ஆடுகளத்தில் முதலில் பந்து வீசுகிறார்களோ அவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கின்றன.

எங்களால் போதிய அளவு ரன்கள் சேர்க்க முடியவில்லை. லக்னோவில் எப்போதுமே இது நடக்கின்றது.

இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறுகிறது. இதுதான் இங்கு நிலைமையாக இருக்கின்றது.

இருப்பினும் இதையெல்லாம் ஒரு காரணமாக நான் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. இதிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாங்கள் ஆயுஷை இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்துகின்றோம். மாயங் யாதவ்க்கு இன்னும் சில நேரம் பயிற்சி தேவைப்படுகின்றது. சரியான நேரத்தில் அவர் அணிக்குள் வருவார் என்று நம்புகின்றேன்.

lsg vs dc
lsg vs dc

அதிரடி வீரர் ஒருவரைக் களத்திற்கு அனுப்புவதற்காகத்தான் மில்லரை நான் கொண்டு வந்தேன். ஆனால் பந்து நின்று வந்ததால் எந்த பேட்ஸ்மேனாலும் ரன் அடிக்க முடியவில்லை.

எங்கள் அணியில் சிறந்த காம்பினேஷன் எது என்பதை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்”  என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Tilak Varma: 'அந்த நேரத்தில் கிரிக்கெட் பற்றியப் புரிதலே எனக்கு கிடையாது'- திலக் வர்மா ஓப்பன் டாக்

மும்பை அணி வீரர் திலக் வர்மா ஜியோ ஸ்டாருக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்த நேர்காணலில் பேசிய அவர், “கடந்த ஆண்டு ஐதராபாத்தில் மும்பை அணிக்காக விளையாடிய... மேலும் பார்க்க

Pahalgam Attack: "மௌன அஞ்சலி, கறுப்பு பட்டைகள்..." - MI vs SRH போட்டியில் BCCI அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு இன்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும... மேலும் பார்க்க

LSG vs DC: லக்னோவிடம் பழைய கணக்கைத் தீர்த்த KL ராகுல்! பண்ட் எந்த இடத்தில் மேட்சை விட்டார்?

நடப்பு ஐ.பி.எல் சீசனில் தனது முதல் ஆட்டத்திலேயே டெல்லியிடம் நூலிழையில் தவறவிட்ட வெற்றியை, தனது சொந்த மைதானத்தில் மீட்டெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நேற்று (ஏப்ரல் 22) அக்சர் அண்ட் கோ-வை எதிர்கொண்டது... மேலும் பார்க்க

Yuvraj Singh: "என் தந்தையைப் போல பயிற்சியாளராக அல்லாமல் என் மகனுக்கு தந்தையாக இருப்பேன்" - யுவராஜ்

இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், தனது தந்தையின் வளர்ப்பு, அவருடனான தனது உறவுமுறை, அவரின் கண்காணிப்பில் தான் மேற்கொண்ட தீவிர கிரிக்கெட் பயிற்சிகள், அந்த அனுபவங்களால் தன்... மேலும் பார்க்க

Rajasthan Royals: LSG-யிடம் 2 ரன்னில் தோற்றது மேட்ச் பிக்ஸிங்கா? - குற்றச்சாட்டும், RR விளக்கமும்!

சிஎஸ்கே, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகளைப் போல நடப்பு ஐ.பி.எல் சீசனில் மோசமாக செயல்பட்டு வரும் அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் அணியும் இணைந்திருக்கிறது. அதிலும், டெல்லி, லக்னோ அணிகளுக்கெதிரான கடைசி இரண்டு ... மேலும் பார்க்க

Dhoni: 'என்னால் சகித்துக்கொள்ள முடியாத வதந்தி அதுதான்...'- தோனி ஓப்பன் டாக்

ஐ.பி.எல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சீசனுக்கு இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தோனி கலந்துகொண்டிருக்கிறார். அதில், தோனி பற்றி முன்... மேலும் பார்க்க