செய்திகள் :

LSG vs MI: "இதுக்குத்தான் சம்பளம் வாங்குறோம்" - மும்பை அணியை வீழ்த்தியது குறித்து ஷர்துல் தாக்கூர்

post image

ஐ.பி.எல் தொடரின் நேற்றையைப் போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மோதின. இதில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியின் அருகே வந்த நிலையில் லக்னோ அணியின் சார்பாக ஷர்துல் தாக்கூர் வீசிய ஒரு ஓவர், ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றியது.

ஷர்துல் தாக்கூர்
ஷர்துல் தாக்கூர்

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஷர்துல் தாக்கூர், "வெற்றி பெற்ற அணியாக இருப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.

கடைசி ஓவர் வீசும் போது எப்போதுமே பவுலர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். ஆவேஸ் கானும் சரியான முறையில் பவுலிங் செய்தார். இதனைச் சரியாகச் செய்வதற்காகத்தான் நாங்கள் சம்பளம் வாங்குகின்றோம்.

எங்களுடைய திட்டத்தை நாங்கள் சரியாகக் களத்தில் செயல்படுத்தினோம். இந்த ஆடுகளம் கொஞ்சம் நெருக்கடியைக் கொடுத்தது.

நாங்கள் முதல் பாதியில் மும்பை அணிக்குப் பந்து வீசும் போது ஆடுகளம் எப்படிச் செயல்பட்டது என்பதைக் கண்காணித்தோம். எனினும் நாங்கள் பந்து வீசும் போது ஆடுகளம் கொஞ்சம் மாறி பேட்டர்ஸ்க்கு சாதகமாக இருந்தது" என்றிருக்கிறார்.

திக்வேஸ்
திக்வேஸ்

தொடர்ந்து ஆட்டநாயகன் விருது வென்ற திக்வேஸ் குறித்துப் பேசிய அவர், "திக்வேஸ் அபாரமாகச் செயல்பட்டு வருகிறார். இது போன்ற வீரர்கள் எப்போதுமே தங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தப் பயப்பட மாட்டார்கள். இது திக்வேஸுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றது.

பயிற்சி ஆட்டத்தில் அவர் எப்படிப் பந்து வீசினார், அவருடைய பலம் என்ன என்பதை எல்லாம் நாங்கள் பார்த்தோம். நிச்சயமாக ஐ.பி.எல் தொடரில் ஒரு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடிய வீரராக திக்வேஸ் இருக்கின்றார்" என்று பாராட்டிப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

PBKS vs RR: ``அணிக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி'' - மீண்டும் கேப்டனான சஞ்சு சாம்சன்

ஐபிஎல் இன்றைய (ஏப்ரல் 5) போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் நேருக்கு நேர் களமிறங்கின. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்படாமல் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டும் செய்துவ... மேலும் பார்க்க

CSK vs DC : 'எங்களால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை...' - கேப்டன் ருத்துராஜ் வேதனை

'சென்னை அணி தோல்வி!'சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. சேப்பாக்கத்தில் சென்னை அணியை டெல்லி அணி 15 ஆண்டுகள் கழித்து வீழ்த்த... மேலும் பார்க்க

CSK vs DC: 'டெஸ்ட் மேட்ச் ஆடுற இடம் இது இல்ல தோனி & கோ'- சென்னையின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?

நடப்பு சீசனில் சென்னை அணி மீண்டும் ஒரு தோல்வியை அடைந்திருக்கிறது. இது ஹாட்ரிக் தோல்வி. முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக வென்றிருந்தார்கள். அதன்பிறகு எந்தப் போட்டியிலும் வெல்லவில்லை. எல்லா போட்டியிலு... மேலும் பார்க்க

Rishabh Pant: ``ரிஷப் பண்ட்டை அப்படிச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை'' - LSG சஞ்சீவ் கோயங்கா

ஐபிஎல் நடப்பு தொடரில் நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்ற லக்னோ vs மும்பை போட்டியில் கடைசிநேர திருப்பங்களால் லக்னோ த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, மிட்செல் மார்ஷ், ஏய்டன் மார்க்ரம் ஆகிய... மேலும் பார்க்க

LSG vs MI: "மும்பை அணி சிறப்பாகத்தான் விளையாடியது; ஆனால்..." - வெற்றி குறித்து ரிஷப் பண்ட்

ஐ.பி.எல் தொடரின் நேற்றையைப் போட்டியில் மும்பை அணியும், லக்னோ அணியும் மோதின. இதில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வீழ்த்தியது.இந்நிலையில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய ரிஷப் பண்ட், ... மேலும் பார்க்க

Dhoni : `இன்றைய போட்டியோடு ஓய்வை அறிவிக்கிறாரா தோனி?'- பரவும் செய்தியும் பின்னணியும்

'பரவும் செய்தி!'சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இன்று சேப்பாக்கத்தில் மோதவிருக்கிறது. ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் தோனி இந்தப் போட்டியில் கேப்டனாக செயல்ப... மேலும் பார்க்க