டொனால்டு டிரம்ப் வெற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிப்பு: ஜன.20 பதவியேற்பு...
MadhaGajaRaja: 12 வருட காத்திருப்புக்கு... மதகஜராஜாவின் ரிலீஸ் தேதியை அறிவித்த சந்தானம்!
விஷாலின் 'மதகஜராஜா' படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சந்தானம் அறிவித்திருக்கிறார்.
கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட் தவிர மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் எடுக்கப்பட்ட படம் 'மதகஜராஜா'. ஜெமினி ஃபிலிம் சர்கியூட் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
நடிகை சதா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் படம் 2012-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது.
மேலும், அந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் எனப் படக்குழுவும் அறிவித்திருந்தது. ஆனால் சில பிரச்னைகளால் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமலிருந்தது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை நடிகர் சந்தானம் அறிவித்திருக்கிறார். அதன்படி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைச் சந்தானமும் இதனைத் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...