செய்திகள் :

Mahavatar Cinematic Universe: 2037 வரை 7 படங்கள்; ஹோம்பலே பட நிறுவனம் அறிவிப்பு; வெளியீடு எப்போது?

post image

ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் ஆகியவை தங்கள் அனிமேஷன் தொடரான 'மஹாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்' கான அப்டேட்டை வெளியிட்டுள்ளன.

10 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கப் போகும் இந்தத் தொடரின் முதல் பாகமான 'மஹாவதார் நரசிம்மர்' வரும் ஜூலை 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த மஹாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்கான கடைசி படம் 2037 இல் மஹாவதார் கல்கி பாகம் 2 உடன் முடிவடையவுள்ளது. 

Mahavatar Cinematic Universe
Mahavatar Cinematic Universe

மகாவிஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை விவரிக்கும் வகையில் இந்தப் படைப்புகள் தயாராகி வருகின்றன.

இந்தத் திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் மஹாவதார் நரசிம்மா (2025 ), மஹாவதார் பரசுராம் (2027 ), மஹாவதார் ரகுநந்தன் (2029 ), மஹாவதார் துவாரகாதீஷ் (2031 ), மஹாவதார் கோகுல நந்தா (2033 ), மஹாவதார் கல்கி பார்ட் ஒன் (2035 ), மஹாவதார் கல்கி பார்ட் 2 (2037) ஆகிய வரிசையில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கின்றன.

ஹோம்பாலே நிறுவனம் கே.ஜி.எஃப், காந்தாரா உள்ளிட்ட ஹிட்டான திரைப்படங்களைத் தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இயக்குநர் அஷ்வின் குமார் பேசுகையில், “க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பாரத நாட்டின் பாரம்பரியத்தை இதுவரையில் அனுபவித்திராத வகையில் பெரிய திரைக்குக் கொண்டு வந்து, சினிமா அனுபவத்தைத் தருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

மஹாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் மூலம் தசாவதாரத்தின் வித்தியாசமான அனுபவம் இனிதே தொடங்குகிறது. இனி பாரதம் கர்ஜிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் அஷ்வின் குமார்
இயக்குநர் அஷ்வின் குமார்

இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷில்பா தவான் பேசுகையில், “எங்கள் கதைகள் திரையில் உயிர்பெற்றுக் கர்ஜிப்பதைக் காண நான் ஆவலாக இருக்கிறேன். ஒரு புதிய காவிய சினிமா அனுபவத்திற்கு அனைவரும் தயாராகுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இந்த யுனிவர்சின் முதல் திரைப்படமாக மஹாவதார் நரசிம்மா வெளியாக உள்ளது. ‘மகாவதார் நரசிம்மா’வை இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கியுள்ளார்.

இதனை க்ளீம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷில்பா தவான் -குஷால் தேசாய் மற்றும் சைதன்யா தேசாய் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Mahavatar Cinematic Universe
Mahavatar Cinematic Universe

இந்தத் திரைப்படம் 3D எனப்படும் முப்பரிமான தொழில்நுட்பத்துடன், ஜூலை 25 ஆம் தேதியன்று ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது. 

இந்த மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸுடன் காமிக்ஸ், வீடியோ கேம்ஸ், டிஜிட்டல் முறையிலான கதை சொல்லல் எனச் சேர்ந்து வெளியாவது குறிப்பிடத்தக்கது. 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``காந்தாரா போல தமிழில் பிரமாண்டமாக பான் இண்டியா படம் எடுக்கவுள்ளேன்..'' - விஜய் ஆண்டனி

"போர் என்பது தவறானது, காசாவில் உள்ள குழந்தைகளை பார்க்கும்போது மிகுந்த கவலையாக இருக்கிறது இப்போதெல்லாம் கடவுள் எங்கே போனார் என கேட்கும் அளவிற்கு மனநிலை உள்ளது.." என்று இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆ... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 08: `சுற்றி 200 பேர்; அந்தப்பாம்பு காட்சி எடுக்கிறப்போ.!' - துறுதுறு நாயகி ஜெயசித்ரா

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, துறுதுறுன்னு இருக்கிற ஒரு ஹீரோயின் கேரக்டர் எப்படி இருக்கணும்னு டிரெண்ட் செட் பண்ண நடிகை ஜெயசித... மேலும் பார்க்க

Tourist family: `ஆட்டோவில் கிடைத்த மகிழ்ச்சி, அளவிட முடியாது' -இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்சி

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் ஆட்டோவில் பயணித்த போது, அங்கு நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அறிமுக இயக்குனரான அபிஷன் ஜீவிந்த், சசிகுமார், ச... மேலும் பார்க்க

`விகடனுக்கு நன்றி... இந்த புகைப்படத்தை எடுத்தது VJS' - நெகிழ்ந்த ஜி.வி பிரகாஷ்குமார்

ஆனந்த விகடனின் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை ) விருதை ஜி.வி பிரகாஷ் வென்றுள்ளார். நேற்று சென்னையில் ஆனந்த விகடன் 2024 ஆம் ஆண்டுக்கான சினிமா விருது விழா நடைபெற்றது. இதில் சிறந்த... மேலும் பார்க்க

நயன்தாரா - விக்னேஷ் சிவன்: "என் ஆன்மா விரும்பிய அனைத்தும் நீ தான்" - திருமண நாள் பகிர்வு!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். திருமண நாள் ஸ்பெஷலாக கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கும் புகைப்படங்களை நெகிழ்ச்சியான வரிகளுடன் பகிர்ந்துள்ளார் நயன்... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 07 : 'சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கு' - படாபட் ஜெயலட்சுமி நினைவுகள்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல கண்களுக்கு இதமா ஓர் அழகான மூன்றாம் பிறை போல, சீக்கிரமே புகழ், வெகு சீக்கிரமே மரணம்னு ஜொலிச்சி மற... மேலும் பார்க்க