செய்திகள் :

பிளாங்டன் மீனாக பறந்து வா அப்பா - மகனின் கண்ணீர் | #உறவின்கடிதம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

உனக்கு இறக்கைகள் இல்லை அப்பா, இருந்தாலும் எனக்காக பறப்பாய். பூமியே உன் முட்டை அடைக்காப்பாய். தோல்களில் என்னைத் தூக்கிச்சுமப்பாய் சுழலும் பூமியில் சுழலும் இராட்டினம் போல தூக்கிச் சுற்றுவ்வாய். நினைவிருக்கிறது, சிறுவயதில் என்னிடம் நீங்கள் செய்தச் சேட்டைகள் ஒரு குறும்புக்கார சிறுவனான என்னையே மிஞ்சும் குறும்புகள்.

தொடர் மின்தடை காலம், ஒருநாளைக்கு மூன்று மணிநேரம் மாறிமாறி மின்தடை இரவு ஒன்பது முதல் பன்னிரண்டு வரை கதைச்சொல்லி நேரம் டீவியில் இல்லை. உங்கள் நெஞ்சில் சிம்மாசனம் கொண்ட எனக்குத் தெரியவில்லை உங்கள் மார்பிலும் பால்சுரக்குமென்று..

தன்னம்பிக்கை கதைகள் ஏராளமாக சொன்னீர்கள். கோழி திருடியை ராஜா கண்டுபிடிக்கும் கதையில் நான் ராஜாவாக உணர்ந்தேன் நீங்கள ராஜா என்பதை மறந்து. மின்தடைக்கு வருந்தியதே இல்லை.

மழை நாட்களில் மச்சிவீடு ஒழுகும் போது பாத்திரங்கள் கொண்டு மழைநீர் சேகரித்தோம் அப்பா, அம்மா சேர்ந்து நானும் ஆனால் தெரியவில்லை அதில் என் அம்மா கண்ணீர் இருக்குமென்று. தரையில் தண்ணீர் ஊறும் என்பதால் அப்போது மட்டும் கட்டிலில் அம்மா வலதுபுறம் அப்பா, இடதுபுறம் அம்மா நடுவில் நான் சிவனாக,

ஒர் நாள் டீவியின் கீழ்துணியை தீயில் கொலுத்தி விளையாட பற்றிய துணியை அணைக்காமல் பயந்தோடியப் போது அம்மா அறைந்து மூக்கில் ரத்தம் வந்தது.

ரத்தம் பார்த்த அம்மாவோ பயந்தார் ரத்தத்திற்கல்ல நீங்கள் அம்மாவை எனக்காக அடிப்பீர்கள் என்று. அன்று நான் பயந்து அழுது உங்கள் அருகில் அமர்ந்தேன். தாயிடம் இருந்தது தந்தை தன்மை. உங்களிடம் இருந்தது தாய்மை. அப்பா ஏன் நீங்கள் தங்கமீன் ஆனிர்கள். பிளாங்டன் மீனாக பறந்து வா அப்பா, எமனுக்கு நீங்கள் கடைசிப் பூனைக்குட்டியா?

மரணத்தின் பிடியில் அப்பா...

புகைப்பிடிப்பது பிள்ளைகளுக்கு தீங்கானது. அப்பாக்களை பிள்ளையிடம் இருந்துப் பிறித்துவிடும். Life is beautiful (1997) Daddy

-சு.தமிழ்ச்செல்வன்

த/பெ வெ.சுகுமாறன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

25 ஆண்டுகளாக எங்களுக்கு தாயுமானவனாய் இருந்த தந்தையே! - மகன் உருக்கம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எனக்காக செலவழிக்கும் பணத்துக்கு, கணக்கு பார்க்கிறாய்! - அப்பாவின் புலம்பல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அப்பா உன்னை அடிக்கும் போது நான் எதுவுமே செய்யாமல் நின்றேனே! - மகளின் மன்னிப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் துணிப் பெட்டில கொஞ்ச பணத்தோட நீங்க வெச்ச துணிப்பை இன்னனும் இருக்குப்பா! - மகனின் கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Sri Aurobindo: 'கடவுளும் ரோஜாவும்...' - ஸ்ரீ அரவிந்தர் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 17

தத்துவ ஞானி, யோகி, குரு, கவிஞர் எனப் பன்முகங்கள் கொண்ட அரவிந்தர் எப்போது எனக்கு அறிமுகமானாரென்று சரியாக நினைவுக்கு வரவில்லை. பள்ளியில் படிக்கும்போது பேச்சுவாக்கில் வந்தவரென நினைக்கிறேன். மூட்டமான கவித... மேலும் பார்க்க

நான் தப்பு பண்ணிருந்தாலும், அப்பா கேட்குற முதல் கேள்வி, ‘சாப்டியாம்மா?’ - மகளின் கண்ணீர்