Mahesh Babu: ரியல் எஸ்டேட் மோசடி; மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை - நடந்தது என்ன?
பண மோசடி வழக்கு தொடர்பாக தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
ரியல் எஸ்டேட் மோசடி
போலி ஆவணங்களைத் தயாரித்து ஒரே சொத்தை பலமுறை விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக, ஐதராபாத்தைச் சேர்ந்த பாக்யநகர் பிராபர்ட்டீஸ் இயக்குநர் நரேந்திர சுரானா மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவன உரிமையாளர் சதீஷ் சந்திரா குப்தா மீது தெலங்கானா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் பாக்யநகர் பிராபர்ட்டீஸ், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அப்போது, இந்த நிறுவனங்களிடம் இருந்து நடிகர் மகேஷ் பாபு பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தில் மகேஷ் பாபு நடித்திருக்கிறார்.
அமலாக்கத்துறை நோட்டீஸ்
சுமார் ரூ.5.9 கோடியை, ரூ.3.4 கோடி காசோலையாகவும், ரூ.2.5 கோடி ரொக்கமாகவும் மகேஷ் பாபு பெற்றுள்ளதாக அமலாக்கத்துறைத் தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில், இந்த பணமோசடி தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

அதன்படி, ஏப்ரல் 27-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...