MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
Mahindra Thar & XUV 700: Facelift வெர்சனுக்காகக் காத்திருக்கிறீர்களா? உங்களுக்கு தான் இந்த செய்தி
மஹிந்திரா XUV700 அறிமுகமான சில ஆண்டுகளில் நாட்டின் விருப்பமான XUV பட்டியலில் தனக்கென தனி இடம் பிடித்த கார். அதேபோல தாரும். மக்களின் பேவரைட்டான இந்த கார்களின் பேஸ்லிப்ட் (அப்கிரேடட்) வெர்சன் எப்போது வரும் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. அதற்கான பதில் தற்போது தகவலாகக் கிடைத்துள்ளது.
மஹிந்திரா தனது எலெக்ட்ரிக் BE மற்றும் XEV-க்குப் பிறகு முந்தைய மாடல்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதால் 2026-ல் XUV700 மற்றும் தார் கார்களின் அப்கிரேட் வெளியாகலாம் என ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்கிரேடட் வெர்சனில் என்ன எதிர்பார்க்கலாம்?
XUV700 காரைப் பார்த்தால் அதன் அவுட்லுக், மஹிந்திராவின் EV கார்களான XEV 8e மற்றும் 9e போல மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றாக இணைந்த LED ஹெட்லைட் செட் அப், மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க கிரில் டிசைன், ஸ்குயர்ட் ஆப் வீல் ஆர்சஸ் என வடிவமைப்பில் மாற்றம் ஏற்படும் அதே நேரத்தில் இன்டீரியரும் ஸ்போர்ட்டியாக மாறவுள்ளது. பாதுகாப்பு சார்ந்து மேம்படுத்தப்பட்ட ADAS பேக்கேஜ் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.
XUV700 காரின் எலெக்ட்ரிக் வெர்சன் XEV7e என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. பவர்ட்ரைன் ஆப்ஷன்களில் பெரிதாக மாற்றம் இருக்காது. 2.0 டர்போ பெட்ரோல் இன்ஜின், 197 bhp மற்றும் 380 nm டார்க் தரக்கூடிய வேரியண்டும் டீசல் இன்ஜின் 2.2 லிட்டர், 153-183 bhp மற்றும் 360-450 nm டார்க் தரக்கூடியதும் ஏற்கெனவே உள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் ஆட்டோமேட்டிக் ஆக இரண்டு வேரியன்ட்களும் கிடைக்கின்றன.

தாரைப் பொறுத்தவரை தற்போது அப்கிரேட் ஆகவுள்ள 3 டோர் தார் மஹிந்திராவின் மற்றுமொரு தார் வேரியன்ட் ஆன 5 டோர் ரோக்ஸ்-இன் அப்டேட்டை பெறவுள்ளது. முன்பக்க கிரில், சி வடிவிலான LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் செட்-அப், புது அலாய் வீல்கள் இடம்பெறும்.

5 டோர் தாரில் உள்ளது போலான புது ஸ்டீயரிங் வீல் அப்டேடட் பட்டன் பிளேஸ்மென்ட் உடன், பெரிய இன்போடெயின்மென்ட், முழுமையான டச் ஸ்கிரீன் உடனான சன் ரூப், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என இந்த பேஸ்லிப்ட் வெர்சன் தாறுமாறாக இருக்கப் போகிறது. ஏற்கெனவே கிடைக்கிற பவர்ட்ரெய்ன் ஆப்ஷன்களான mHawk 1.5 லிட்டர் டீசல், 2.0 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என மூன்று இன்ஜின்கள் அப்படியே தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அப்டேட்டுக்கு நீங்க ரெடியா?