செய்திகள் :

Mandaadi: "சூரி சார், உங்க சினிமா பயணம் எனக்கு இன்ஸ்பிரேஷன்" - மஹிமா நம்பியார்

post image

நடிகர் சூரி தற்போது ‘மண்டாடி’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் என்பவர் இயக்குகிறார்.

மஹிமா நம்பியார், சத்யராஜ், அச்சுயுத் குமார் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

மண்டாடி
மண்டாடி

இப்படத்தின் அறிமுக விழா நேற்று (ஏப்ரல் 21) மாலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய மஹிமா நம்பியார், "தமிழில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன். 

மதிமாறன் சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நிறையப் பேரிடம் கதை சொன்னேன். ஆனால் நீங்கள் மட்டும்தான் நடிக்க ஓகே சொன்னீர்கள் என்றார்.

நான் இந்தப் படத்தில் நடிப்பதை ஒரு சேலன்ஞ் ஆகத்தான் நினைக்கிறேன். கதை சொன்ன உடனேயே நான் ஓகே சொல்லிவிட்டேன்.

மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்து விட்டேன். அதனால் தமிழில் ஒன்றரை வருடங்களாக நடிக்கவில்லை.

மஹிமா நம்பியார்

திரும்பத் தமிழில் நடிக்க ஆரபிக்கும்போது ஒரு நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். சூரி சார் உங்கள் வேலையை எப்போதும் நான் பின்பற்றுவேன்.

உங்களின் சினிமா பயணம் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்தான். உங்களுடன் பணியாற்ற இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Kudumbasthan: ''குடும்பஸ்தன் நான் பண்ணியிருக்க வேண்டிய படம்... ஆனால்'' - சிபி சத்யராஜ் பேட்டி

"இயக்குநர் இரண்டு மணி நேரமாகக் கதை சொன்னார். கதையில் நிறைய திருப்பங்கள் இருந்தன. கேட்டபிறகு எனக்கு ரொம்பப் பிடித்தது. நான் மறுபடியும் ஸ்கிரிப்ட் படிக்க வேண்டும் என்று கேட்டு வாங்கிப் படித்தேன். அது இன... மேலும் பார்க்க

Kamal: விக்ரம் படத்தில் நடிச்ச அனுபவம்; கமல் சாரை பாரக்க ஏக்கம் - டூப் ஆர்டிஸ்ட் கதிர் கமலின் கதை

உலகநாயகன் கமல்ஹாசன் போல் பல மேடைகளில் நகல் நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வருபவர்தான் கதிர் கமல். நடிகர் கமல்ஹாசன் போலவே உருவத்தைக் கொண்டிருக்கும் இவர், அந்த உருவத்திற்காகவே தன்னுடைய வாழ்நாளையும் அர்ப்... மேலும் பார்க்க

What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

நாங்கள் (தமிழ்)நாங்கள் (தமிழ்)அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் அப்துல் ரஃபே, மிதுன், ரிதிக், நிதின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நாங்கள்'. ஊட்டியில் அம்மா விட்டுட்டுப் போக மூன்று ஆண் குழந... மேலும் பார்க்க

Suriya: "என் அடுத்த படத்தைத் தொடங்குகிறேன்" - கவுகாத்தி கோயிலில் சூர்யா, ஜோதிகா தரிசனம் |Photo Album

Retro: படப்பிடிப்பில் சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம்; "டூப் வச்சுக்கக் கூடாதா" - நாசர் பகிர்ந்த சம்பவம்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்ப... மேலும் பார்க்க

Sachein: சுனாமி; மிஸ்ஸான சந்தானம் ; பணத்துக்கு நோ சொன்ன எஸ்.ஏ.சி |Unknown Facts

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான 'சச்சின்' திரைப்படம் இப்போது ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது . படம் வெளியாகி 20 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இப்போதும் ரீ ரிலீஸில் படத்... மேலும் பார்க்க

Na.Muthukumar: `அணிலாடும் முன்றில்' விகடன் ப்ளே ஆடியோ புக் வெளியீட்டு விழா

எல்லாக் காலங்களிலும் வாசிப்பு மிக முக்கியமான ஒன்று. அந்த வாசிப்பினை எல்லா தரப்பு மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிதான் Vikatan Play. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களோடு வாசிக்க சூழல் அமையாதவர்களும் கேட... மேலும் பார்க்க