செய்திகள் :

Maori: "உரிமைகளைப் பறிக்கப் பார்க்கிறார்கள்.." - நியூசிலாந்து தலைநகரை ஸ்தம்பிக்க மாவோரி பழங்குடிகள்

post image

வைதாங்கி ஒப்பந்தமானது நியூசிலாந்தின் வரலாறு மற்றும் அதன் அரசியலமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நியூசிலாந்தின் 'வைதாங்கி ஒப்பந்தம்' (Waitangi Treaty) என்பது 1840 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசு மற்றும் மாவோரி மக்களுக்கிடையேயான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம், நியூசிலாந்து மாவோரி மக்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் பரஸ்பர ஒப்பந்தமாகக் கையெழுத்தாகி, நாட்டின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதை மையமாக வைத்து அமைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. அதிகார பரிமாற்றம், பன்முக உரிமைகள், சட்ட சமாதானம்.

'வைதாங்கி தினம்' (Waitangi Day) என்பது அந்த ஒப்பந்தத்தின் நினைவாக நியூசிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஒப்பந்தமானது மாவோரி மக்களுக்கும் நியூசிலாந்து அரசுக்கும் இடையே பலவகையான சர்ச்சைகளுக்கும் உரிமைகள் தொடர்பான விவாதங்களுக்கும் வழிவகுத்தது.

வைதாங்கி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது, அது மாவோரி மக்களுக்கு எதிரான பல இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியது. ஒப்பந்தம் வாயிலாக உரிமைகள் மற்றும் நியாயங்களைப் பெறுவதாக இருந்தாலும், மாவோரி மக்களின் பாரம்பர்ய நிலங்கள், பண்பாடு மற்றும் அதிகாரங்கள் புறக்கணிக்கப்பட்டன. இதனால், மாவோரி மக்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர்.

தற்போது இந்த வைதாங்கி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக மாவோரி இன எம்.பி ஹனா என்பவர் மாவோரி இன மக்களின் பாரம்பர்ய பாடலைப் பாடியவாறே அந்த மசோதாவின் நகலைக் கிழித்தார். அவையில் தன் எதிர்ப்பை இவ்வாறாகக் காட்டினார். அவருடன் மற்ற மாவோரி இன எம்.பிகளும் பாடலைப் பாடி தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அவர்களின் பழங்குடியின பாடலும், ஆவேச நடனமும், மசோதாவுக்கு எதிரான தங்களின் கருத்தை வெளிப்படையாக எதிரொலித்ததும் நியூசிலாந்து மட்டுமன்றி உலகத்தையே உற்றுப் பார்க்க வைத்ததுள்ளது. இந்த நிகழ்வுக்குப் பின் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மாவோரி எம்.பிக்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற உத்தரவு பிறப்பித்தார்.

வைதாங்கி ஆவணத்தை மறுபரிசீலனை செய்ய முயன்ற சர்ச்சைக்குரிய இந்த மசோதாவுக்கு எதிராக நியூசிலாந்தின் பாராளுமன்றத்திற்கு வெளியே 40,000க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மாவோரி மக்கள் நியூசிலாந்து தலைநகரை நோக்கி போராட்டங்களுக்காகக் குவிந்துள்ளனர். "எங்கள் உரிமைகளைப் பறிக்கப் பார்க்கிறார்கள்" என்று முழக்கமும் எழுப்பப்பட்டன.

பல விமர்சகர்கள் இந்த மசோதாவை மாவோரி மக்களிடமிருந்து உரிமைகளை எடுத்துச் செல்லும் முயற்சியாகவே பார்க்கிறார்கள்.

இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹாக்கா என்கிற பாரம்பர்ய நடனம் ஆடியதால் நியூசிலாந்து நாடாளுமன்றம் கடந்த வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தின் காட்சிகள் வைரலானது.

திங்களன்று ஹக்காவின் வார்த்தைகளைப் பங்கேற்பாளர்களுக்குப் போராட்ட அமைப்பாளர்கள் கற்றுக் கொடுத்தனர். பார்வையாளர்கள் ஒரு பெரிய வெள்ளைத் தாளில் எழுதப்பட்ட பாடல் வரிகளை ஆர்வத்துடன் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

மாவோரி மக்கள் தங்கள் பாரம்பரிய உரிமைகள் மற்றும் சமூக நலன்கள் குறித்துப் பேசியுள்ளனர். மாவோரி கலாசாரம், மொழி, மற்றும் நில உரிமைகள் பற்றிய பல முக்கிய கேள்விகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தஞ்சாவூர்:``அரசு மருத்துவரைத் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியை..." - சாடும் எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனைப் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.இவரை சின்னமனைப் பகுதியைச் சேர்ந்த மதன் குமார் என்... மேலும் பார்க்க

`யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை' - விஜய் குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜியின் பதில்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஆர்எஸ் புரம் பகுதியில் ரூ.9.67 கோடி மதிப்பிலான ஹாக்கி மைதானத்தின் பணிகள் விரைவில் தொடங்கும். இது ஹாக்கி விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் க... மேலும் பார்க்க

"அதிமுக-வுடன் கூட்டணி இல்லை" - போட்டுடைத்த விஜய்... உடைந்த உளவுத்துறை கேம்?!

சமீப நாள்களாக, 'அ.தி.மு.க-வுடன் த.வெ.க கூட்டணி அமைக்கப் போகிறது', '154 இடங்களில் அ.தி.மு.க-வும் 80 இடங்களில் த.வெ.க-வும் கூட்டணி அமைத்துப் போட்டியிட போகின்றன', 'அ.தி.மு.க கூட்டணியில் துணை முதல்வராகப் ... மேலும் பார்க்க

``ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி கடத்தல்" - தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடை அரிசி கடத்தலால் 2022-23ம் ஆண்டில் ரூ.1,900 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "தேர்தல் நேரத்தில் கிரிப்டோகரன்சி ஊழலா?" - பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் சுப்ரியா புகார்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 20) அதிகாலையில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்தலுக்கு முந்தைய தினமான நேற்று மாலை பா.ஜ.க தேசியச் செயலாளர் வினோத் தாவ்டே, மும்பை அருகே... மேலும் பார்க்க

"கூட்டணிக்கு சும்மா வர்றதில்ல; 20 சீட், ரூ.100 கோடி கேட்கிறாங்க" - போட்டுடைத்த திண்டுக்கல் சீனிவாசன்

திருச்சியில் நேற்று (நவம்பர் 19) அ.தி.மு.க கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,"கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.க 53-வது... மேலும் பார்க்க