முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
MI vs CSK : '17 வயசு பையனை லெவன்ல எடுத்திருக்கோம்!' - தோனி கொடுத்த அப்டேட்
'மும்பை vs சென்னை!'
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கிறது. சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. ப்ளே ஆப்ஸ் வாய்ப்பில் நீடிக்க சென்னை அணி இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும்.

இந்நிலையில், போட்டிக்கு முன்பான டாஸை மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்திருக்கிறார். டாஸில் சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார்.
'தோனி பேசியவை!'
தோனி பேசியதாவது, 'நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். இரண்டாவது பௌலிங் செய்யும்போது காற்றில் ஈரப்பதம் இருக்கும் என நினைக்கிறேம். எல்லாரும் ஒன்றாக அணியாக இணைந்து போட்டியை வெல்ல வேண்டும். எங்கள் அணியில் பெரிய மேட்ச் வின்னர்கள் இல்லை. அதனால் எல்லாருடைய பங்களிப்பும் தேவை.

பீல்டிங்கில் நாங்கள் ரொம்பவே சொதப்புகிறோம். நிறைய கேட்ச்களை ட்ராப் செய்திருக்கிறோம். அதில் கொஞ்சம் கூடுதல் கவனம் வைத்திருக்கிறோம். பேட்டிங்கிலுமே எங்களுக்கு பிரச்சனைகள் இருக்கிறது. இந்தப் போட்டியில் ராகுல் திரிபாதிக்கு பதில் ஆயுஷ் மாத்ரேவை அணிக்குள் அழைத்து வருகிறோம்.' என்றார்.
ஆயுஷ் மாத்ரேவுக்கு 17 வயதுதான் ஆகிறது. சென்னை அணிக்காக அறிமுகமாகும் மிக இளம் வயது வீரர் ஆயுஷ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.