செய்திகள் :

MK Stalin: `ஒன்றும் ஆகவில்லை; எப்போது டிஸ்சார்ஜ்?' - ஸ்டாலினை சந்தித்த துரைமுருகன் கூறுவது என்ன?

post image

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வழக்கமாக நடைபயிற்சி சென்றபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்படவே உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அபோல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அபோல்லோ மருத்துவமனை அறிக்கை
அபோல்லோ மருத்துவமனை அறிக்கை

பின்னர் அபோல்லோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நடைபயிற்சியின்போது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

இந்த நிலையில், மருத்துவமனையில் ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின் அவரின் உடல்நிலை குறித்து வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "ஒன்றும் ஆகவில்லை. நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். மாலையில் கூட வீடு திரும்பலாம்" என்று கூறினார்.

முதல்வர் கலந்துகொள்ளவிருந்த திருப்பூர் நிகழ்ச்சிகள் அவரின் உடல்நிலை காரணமாக தேதி குறிப்பிடாமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

கீழடி குறித்த கேள்விக்கு மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர்- என்ன கூறினார்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க எம்.பி டி.ஆர். பாலு, கீழடி அகழாய்வு ஆய்வற... மேலும் பார்க்க

சி.பி.எம் ஸ்தாபகர்; தொழிலாளர்களின் தோழன்... கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

`ஆட்சி நம்மிடம் இருந்தாலும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது!’ - வெடித்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கலந்து கொண்டு பேசுகையில், ``தேசிய ஜனநாய... மேலும் பார்க்க

லேசான மயக்கம்; நிகழ்ச்சிகள் ரத்து; மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் - என்ன நடந்தது?

நடைப்பயிற்சியின் போது...தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைபாடு காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முதல்வருக்கு என்ன ஆனது என்பது குறித்து அறிவாலய மற்றும் மருத்துவமனை ... மேலும் பார்க்க

Achuthanandan: கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

கேரளா மாநில முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினருமான அச்சுதானந்தன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன். வயது... மேலும் பார்க்க